சென்னையில் பனையூர் பகுதியில் உள்ள தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தின் முன்பு பாஜக கட்சிக்கொடி கம்பம் புதிதாக அமைக்கப்பட்டு,அதில் இன்று கொடியேற்ற இருந்த நிலையில் நிலையில் அப்பகுதியில் உள்ள சிலர் அதனை அகற்ற வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து
எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் முன்னேற்பாடும் இன்றி இது குறித்து தகவல் அளிக்காமல் அரசு அதிகாரிகள் கிரேன் வாகனம் கொண்டு திடீரென பாஜக தலைவர் அண்ணாமலை இல்லத்தில் உள்ள கொடிக்கம்பத்தை அகற்ற முயற்சி செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் குவிய தொடங்கினர் இதனை அடுத்து 150கும் மேற்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கொடியை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் இதனால் பாஜகவினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதில் பாஜக நிர்வாகி ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இரவு பத்து மணி முதல் அதிகாலை 3 மணி வரை இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது இதனை அடுத்து அங்கிருந்த பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்து தனியார் மட்டத்தில் அடைத்து வைத்துள்ளனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.