திமுக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன்தான் கடந்த 5 நாட்களாக தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறார். அவருக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது
அதிமுகவில் தொடங்கி பின்னர் கலைஞருக்கு விஸ்வாசியாக அம்பானி அதானி வரிசையில் இருக்கும் திமுக திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர்.
எம்ஜிஆரின் ஆட்சியில்தான் 1980ல் உத்திரமேரூரில் இருந்து எம்.எல்.ஏவாக முதன்முறையாக தேர்வானார் ஜெகத்ரட்சகன். அதனைத் தொடர்ந்து, 1984ல் செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர், ஜெயலலிதா எம்.ஆர் வீரப்பனுக்கு இடையே நடந்த கருத்து வேறுபாட்டில் வீரப்பன் பக்கம் நின்றார். அதனைத் தொடர்ந்து திமுகவில் ஐக்கியமானவர் அரக்கோணம் தொகுதியில் 1999 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
2004ல் வீர வன்னியர் பேரவை என்ற தனி இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்தவர், கருணாநிதியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு 2009ல் திமுகவில் மீண்டும் ஐக்கியமானார். அதே அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு 2009ல் நடந்த தேர்தலில் மீண்டும் எம்பியானார் ஜெகத்ரட்சகன். அவரது வீரவன்னியர் பேரவையும் திமுகவோடு இணைத்துக்கொண்டார்.மத்திய அமைச்சர் பதவியும் பெற்றார். கருணாநிதியின் வலதுகையாக செயல்பட்டார்.
இதன் பின்னர் தான் அசுர வளர்ச்சியை அடைந்தார் ஜெகத்ரட்சகன் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் தனது தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், நிலக்கரி சுரங்கம் என்று அனைத்து துறைகளிலும்புகுந்து விளையாடியுள்ளார்.
மேலும் தனது சொத்து மதிப்பு 114 கோடி ரூபாய் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூறியிருந்தார் ஜெகத்ரட்சகன். ஆனால் வாயை பிளக்கும் அளவிற்கு அவரது சொத்துக்கள் இருக்கின்றது. இலங்கையில் மட்டும் 23000 கோடி முதலீடு செய்துள்ளார் ஜெகத்.
இந்நிலையில் தான் கடந்த 5 நாட்களாக அவருக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டில் பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வரிஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது