குடும்ப அரசியலை செய்து கொண்டு கொள்ளையடிக்க கூடிய கூட்டு குடும்பமாய் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் செயல்பட்டு வருவதாக பாஜக தேசிய சிறுபான்மை செயலாளர் சிறுபான்மை நல அமைப்பின் மாநில பொறுப்பாளர் வேலூர் இப்ராஹிம் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சுக்ரியா மோடி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பயன் அடைந்தவர்களுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்க இருப்பதாகவும், அதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் சிறுபான்மையினர் குறித்த பட்டியல் வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக தேசிய சிறுபான்மை செயலாளர் வேலூர் இப்ராஹிம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது :- பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் பயனடைந்து சிறுபான்மையினருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும், மேலும், மாவட்ட நிர்வாகம் சிறுபான்மையினர் அணிக்கு விழிப்புணர்வு செல்லும்போது, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டி மனு அளித்ததாக கூறினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது :- பிரதமர் கல்வித் திட்டம், பொருளாதரத்தில் மாவட்ட ஆட்சியர் கீழ் இருக்க அதிகாரிகள் முகாம் நடத்த வேண்டும். அது குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பட்டியல் தரவில்லை என்றால், ஜனநாயக ரீதியாக போராடுவோம். இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரிவினியை வாதத்தை உண்டாக்க திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் செயல்பட்டு வருகிறது. ஊழலுக்கு எதிராக பேச முடியாது, குடும்ப அரசியலை செய்து கொண்டு கொள்ளையடிக்க கூடிய கூட்டு குடும்பமாய் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் செயல்பட்டு வருகிறது.
கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு இந்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்வதும், இஸ்லாமியர்கள் அல்லாஹு அக்பர் சொல்வதும், கிறிஸ்தவர்கள் Praise The Lord சொல்வது வழக்கம். அந்தந்த மதத்திற்கு ஏற்ப தங்கள் சந்தோஷத்தை வெளியிடுகிறார்கள். அதனை திமுக அரசியல் செய்து வருகிறது. அங்கிருந்த பாகிஸ்தான் வீரர்கள் ரன் அடிக்கும் போது மைதானத்தில் தொழுதார்கள்.
அப்படி பார்த்தால் இஸ்லாமியர்கள் ஒரு நாளைக்கு 5 முறை அல்லாஹு அக்பர் என்று தொழுது வருகிறார்கள். அதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்திய தேசத்தில் அனைத்து மதங்களும் உண்டு, கும்பிடும் கடவுள் வழிமுறைகள் வேற வேற இருக்கலாம், என்றார்.
திருமாவளனை அயோக்கியன் என்று சொல்வதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. திருமாவளவன் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். திமுக, இஸ்லாமியர்களை வைத்து அரசியல் செய்து வருகிறது. இஸ்லாமியர்கள் திமுக ஏமாற்றுவதை உணர வேண்டும், என்று கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















