மத்தியபிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்:
மத்தியபிரதேசத்தில் நீங்கள் அளிக்கும் ஓர் ஓட்டு, மூன்று அதிசயங்களை நிகழ்த்தப் போகிறது. அதாவது, ம.பி.,யில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்க உதவும்; புதுடில்லியில் உள்ள என்னை பலப்படுத்தும்; ஊழல் நிறைந்த காங்கிரசை,மத்தியபிரதேசத்தில் இருந்து வெளியேற்றும். இந்த மூன்று அதிசயங்களை, வாக்காளர்களாகிய நீங்கள் நிகழ்த்துவீர்கள் என நான் நம்புகிறேன்.
மத்தியில், பா.ஜ., அரசு அமைந்த பின், அரசு நலத்திட்ட உதவிகளை பெற, காங்கிரசால் உருவாக்கப்பட்ட 10 கோடி போலி பயனாளிகள், பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டனர்.இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், தினமும் என்னை காங்., நிர்வாகிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், மக்கள் நலனுக்காக நான் பணியாற்றி வருகிறேன்.
என் தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து, ஏழை மக்களுக்காக 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. ஆனால் நான், எனக்கென்று ஒரு வீட்டை கூட கட்டிக் கொள்ளவில்லை. ஏழைகள் இருக்கும் வீடு தான், என் வீடு என பிரதமர் மோடி பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















