Friday, December 8, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அடல் சுரங்கப் பாதையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி .

Oredesam by Oredesam
October 1, 2020
in இந்தியா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2020 அக்டோபர் 3 ஆம் தேதி காலை 10 மணிக்கு  ரோட்டங்கில் அடல் சுரங்கப்பாதையைத் திறந்து வைக்கிறார்.

உலகில் மிக நீளமான சுரங்க நெடுஞ்சாலையாக இது இருக்கிறது. 9.02 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்க நெடுஞ்சாலை, மணாலியையும் லாஹாவ் – ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியையும் இணைப்பதாக, ஆண்டு முழுக்க போக்குவரத்து நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டதாக இருக்கிறது. முன்னர் கடும் பனிப்பொழிவு இருக்கும் போது ஆண்டுதோறும் சுமார்  6 மாத காலத்துக்கு இந்த பள்ளத்தாக்குப் பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்தது.

READ ALSO

கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறிய திமுக எம்பி பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 மீட்டர்கள் (10,000 அடி) உயரத்தில், இமயமலையில் பிர் பஞ்சால் பகுதியில் அதிநவீன வரையறைகளுக்கு ஏற்ப இந்தச் சுரங்கம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மணாலி மற்றும் லே இடையிலான சாலைப் பயண தூரத்தை 46 கிலோ மீட்டர் அளவுக்குக் குறைப்பதாகவும், பயண நேரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை குறைப்பதாகவும் இது இருக்கும்.

அடல் சுரங்கப் பாதையின் தெற்கு முனைப் பகுதி, 3060 மீட்டர் உயரத்தில் மணாலியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் வடக்கு முனையம் பகுதி 3071 மீட்டர் உயரத்தில் லாஹாவ் பள்ளத்தாக்கில் சிஸ்ஸு, டெலிங் கிராமம் அருகே அமைந்துள்ளது.

குதிரை லாடத்தின் வடிவத்தில் அமைந்துள்ள ஒரே சுரங்கமாக, இரண்டு லேன்கள் கொண்ட இந்தப் பாதையில், வாகனங்கள் செல்ல 8 மீட்டர் அகலத்துக்கு இடவசதி உள்ளது. 5.525 மீட்டர் உயரம் வரையிலான வாகனங்கள் இதில் செல்லலாம்.

இந்தப் பாதை 10.5 மீட்டர் அகலம் கொண்டது. 3.6 X 2.25 மீட்டர் அளவில் தீ பிடிக்காத, அவசர கால சுரங்கம், பிரதான சுரங்கத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்கிறது.

தினமும் 3000 கார்கள் மற்றும் 1500 லாரிகள் செல்லும் வகையில் அதிகபட்சம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் அடல் சுரங்கப் பாதை அமைக்கப் பட்டுள்ளது.

அதிநவீன எலெக்ட்ரோ மெக்கானிக்கல் நடைமுறைகளைக் கொண்டதாக, காற்றோட்ட வசதி கொண்டதாக, SCADA கட்டுப்பாட்டில் இயங்கும் தீயணைப்பு அம்சங்கள் கொண்டதாக, வெளிச்சம் கொண்ட, கண்காணிப்பு முறைமைகள் கொண்டதாக இந்தப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதையில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சில:

a.       இரு முனையங்களிலும் சுரங்கத்தில் நுழையும் இடத்தில் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள்.

b.       அவசர கால தகவல் தொடர்புக்கு 150 மீட்டர் இடைவெளியில் தொலைபேசி இணைப்புகள்

c.       60 மீட்டர்களுக்கு ஒரு இடத்தில் தீயணைப்பு குழாய் வசதிகள்

d.       250 மீட்டர் இடைவெளியில் சிசிடிவி பொருத்தி, ஏதும் நிகழ்வுகளை தானாகவே கண்டறியும் வசதி.

e.       1 கிலோ மீட்டர் இடைவெளியில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் வசதி

f.       வெளிச்சம் ஏற்படுத்துதல் / பயண வழிகாட்டி பலகைகள் 25 மீட்டர் இடைவெளியில் அமைக்கப் பட்டுள்ளன.

g.       சுரங்கப் பாதை முழுக்க வழிகாட்டும் தகவல் அறிவிப்பு வசதி.

h.      50 மீட்டருக்கு ஒரு இடத்தில் தீ பிடிக்காத தரம் கொண்ட காற்று சீர் செய்யும் சாதனங்கள்

i.       60 மீட்டர் இடைவெளியில் கேமராக்கள்.

ரோட்டங் கணவாய்க்கும் கீழே முக்கியமான இந்த சுரங்கப் பாதையை உருவாக்குவதற்கான வரலாற்று முக்கியத்துவமான முடிவு திரு. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2000 ஜூன் 03 ஆம் தேதி எடுக்கப்பட்டது. தெற்கு முனையத்தை இணைப்பதற்கான சாலைக்கு 2002 மே 26 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

பெரிய புவியியல், மலைப்பரப்பு மற்றும் வானிலை சவால்களை முறியடிக்கும் பணியில் எல்லைப் பகுதி சாலைகள் அமைப்பு நிறுவனம் (பி.ஆர்.ஓ.) தொடர்ந்து மேற்கொண்டது. மிகவும் கடுமையான 587 மீட்டர்  நீளம் கொண்ட செரி நளா பால்ட் பகுதி சாலையும் இதில் அடங்கும். இரு முனையங்களில் இருந்தும் இணைப்பு வசதி 2017 அக்டோபர் 15 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது.

2019 டிசம்பர் 24 ஆம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், ரோட்டங் சுரங்கப் பாதைக்கு அவரது பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டது.

மணாலியில் தெற்கு முனையத்தில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பிரதமர் திரு. நரேந்திர மோடி லாஹாவ் ஸ்பிட்டி மற்றும் சோலாங் பள்ளத்தாக்கில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

ShareTweetSendShare

Related Posts

தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!
அரசியல்

கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறிய திமுக எம்பி பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.

December 6, 2023
இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.
அரசியல்

இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.

December 6, 2023
நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!
அரசியல்

தென் மாநிலங்களிலும் பாஜக தான் முதன்மை கட்சி ! நாட்டு மக்களைப் பிரிக்கும் சதியை தென் மாநில மக்கள் முறியடிப்பார்கள்.

December 6, 2023
vanathi Srinivasan
அரசியல்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.

November 30, 2023
தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
அரசியல்

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

November 23, 2023
மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.
அரசியல்

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

November 23, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மறக்க முடியுமாஅந்த மாபாதகத்தை….

February 14, 2020
28 சீக்கிய பக்தர்களை குருத்வாரில் குண்டு வைத்து கொன்ற கேரளாவை சேர்ந்த  தீவிரவாதி மொகம்மது!

28 சீக்கிய பக்தர்களை குருத்வாரில் குண்டு வைத்து கொன்ற கேரளாவை சேர்ந்த தீவிரவாதி மொகம்மது!

March 28, 2020
குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு 3 நாட்கள் மட்டுமே அவகாசம் அமித் ஷா அதிரடி !

குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு 3 நாட்கள் மட்டுமே அவகாசம் அமித் ஷா அதிரடி !

February 14, 2020
ஜெய் பீம் படத்தின் திட்டமிட்ட சதியை  வெளிகொண்டு வந்த மாரிதாஸ்……!

ஜெய் பீம் படத்தின் திட்டமிட்ட சதியை வெளிகொண்டு வந்த மாரிதாஸ்……!

November 17, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • கோமூத்ரா மாநிலங்கள் எனக்கூறிய திமுக எம்பி பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்.
  • இந்தி பேசும் “கோமூத்ரா” மாநிலங்கள்:நாடாளுமன்றத்தில் திமுக எம்பி பேச்சு.
  • வெள்ளத்தில் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளதா?: இன்சூரன்ஸ் பெறும் வழி !
  • தென் மாநிலங்களிலும் பாஜக தான் முதன்மை கட்சி ! நாட்டு மக்களைப் பிரிக்கும் சதியை தென் மாநில மக்கள் முறியடிப்பார்கள்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x