அனைத்து கட்சிகளும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றது.தேர்தலுக்கு முன் கருத்துக்கணிப்புகள் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் பா.ஜ.க தான் ஆட்சி அமைக்கும் என கூறிவரும் நிலையில் காங்கிரஸ் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு வியூகம் அமைத்து கொடுத்த தேர்தல் ஆலோசகர் சுனில் கனுகோலை தற்போது கழட்டிவிட்டுள்ளது காங்கிரஸ்.
பாராளுமன்ற தேர்தலுக்கு வியூகம் அமைக்கும் காங்கிரஸ் ஆலோசகர் சுனில் கனுகோலுவை பாராளுமன்ற தேர்தலில் கவனம் செலுத்த வேண்டாம் என கூறியுள்ளது. சுனில் கனுகோலு ஹரியானா, மஹாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்துவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் ஆலோசகர் சுனில் கனுகோல் கர்நாடகாவை சேர்ந்தவர். சமீபத்தில் சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு சுனில் கனுகோல் முக்கிய பங்கு வகித்தார். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடிக்கு, தேர்தல் பிரசார திட்டங்கள் வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
கடந்த 2018ல், பா.ஜ.,வுக்காக செயல்பட்ட இவரை, கடந்த ஆண்டு மார்ச்சில், கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஆலோசகராக காங்கிரஸ் நியமித்தது. அதன் பிறகு சுனில் கனுகோலுதான் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு மாநிலங்களில் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வந்தார். ஆனால் அவர் தற்போது லோக்சபா தேர்தலுக்கான பிரச்சார அணியில் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து 2வது ஆலோசகரான சுனில் கனுகோலுவையும் காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்குப் பதிலாக சுனில் கனுகோலு ஹரியானா, மாகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்துவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர், 2 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் அணியிலிருந்து விலகினார். தற்போது 2வது முக்கிய ஆலோசகரை காங்கிரஸ் இழந்துள்ளது.
இது காங்கிரசுக்கு மிகப்பெரும் பின்னடைவு ஆகும். காங்கிரஸின் அரசியல் செயல்பாட்டில் உள்ள குறைகளை சுட்டி காட்டியதால் தான் சுனிலை ஓரம் காட்டியுள்ளார்கள் காங்கிரஸ் என தகவல்கள் தெரிவிக்கிறது.