அறுவை சிகிச்சை அரங்குக்கு சென்று குழந்தை பிறப்பை பதிவு செய்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்ஃபான் மீதும் சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில்,தனியார் மருத்துவமனை மீதும் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதில்,போலி மருத்துவத்தை ஊக்குவிப்பதாக கூறி மருத்துவத்துறை அதிகாரிகள் மருத்துவர் மீது புகார்.மருத்துவரை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.
மேலும்,வீடியோ எடுக்கப்பட்ட நாளில் அறுவை சிகிச்சை அரங்கில் பணியில் இருந்தவர்களிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை.
அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றது யார்?, எத்தனை சுத்திகரிக்கப்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்பட்டது போன்ற விவரங்களைக் கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து,தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,”குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்ஃபானை மன்னிக்க முடியாது”.
மன்னிப்பு கேட்டாலும், அதை ஏற்க முடியாது இர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் இல்லை.
“மருத்துவர் நிவேதிதா பயிற்சியை தொடர தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது”.தவறு செய்தவர்களுக்கு அரசு நிச்சயம் தண்டனை வழங்கும்.இந்த முறை இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்.தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டியது மருத்துவ சட்டத்திற்கு எதிரானது.நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என குறியிள்ளார்.