குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் காமராஜர் சிலை அருகே குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். சென்னை பெருநகர மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர், சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். குடியரசு தினவிழாவினையொட்டி விருதுகள் வழங்கபட்டது தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய 128 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார்.
அப்போது விருது வாங்க வந்த மின் பொறியாளரை நிற்க வைத்து விட்டு மேயர் பிரியா செல்போனில் உரையாட ஆரம்பித்தார். விருது வாங்க வந்தார் நின்று கொண்டே இருக்க சென்னை மாநகராட்சியின் ஆணையர் ராதாகிருஷ்ணன் காத்து கொண்டிருக்க சிரித்து சிரித்து போனில் பேச ஆரம்பித்தார்.மேயர் பிரியா
இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் இதுதான் மரியாதை தரும் லட்சணமா என மேயர் பிரியா காது பட பேச ஆரம்பித்தார்கள்.மேலும் அவரின் மெச்சூரிட்டி இவ்ளோதான் இவர்களை யார் மேயர் ஆக்கியது…. என புலம்ப வைத்துவிட்டார். மேயர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.