இன்று அதிகாலையில் இருந்து நாம் தமிழர் கட்சியின் டாப் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ தீவிர ரெய்டுகளை நடத்தி வருகிறது. இந்த ரெய்டுக்கு என்ன காரணம் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்ய்பட்ட இயக்கத்தினர் இந்தியாவில் ஊடுருவி உள்ளார்களே என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொடர்பில் இருந்ததல் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் : கடந்த 1990, ஜனவரி 25-ல் ஜம்முவின் ராவல்போரா பகுதியில் நம் விமானப் படை வீரர்கள் ஸ்ரீநகர் விமான நிலைய பணிக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கு ஜம்மு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 18 அம தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவத்தின் போது உடனிருந்த முன்னாள் விமானப் படை வீரர் ராஜ்வர் உமேஷ்வர் சிங் நேரில் ஆஜரானார். புதுடில்லியில் திஹார் சிறையில் உள்ள முக்கிய குற்றவாளியான யாசின் மாலிக் வீடியோ வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ‘சம்பவம் அன்று தான் அணிந்திருந்த அங்கியில் இருந்து துப்பாக்கியை எடுத்து வீரர்களை நோக்கி யாசின் மாலிக் சரமாரியாக சுட்டார்’ என உமேஷ்வர் அடையாளம் காட்டினார்.
கடலூரில் கடந்த 2013-ல் நடைபெற்ற நாம் தமிழர் மாநாட்டில் சீமான், விமான படை வீரர்களை கொன்ற யாசின் மாலிக் பங்கேற்றான். அதை பலத்த எதிர்ப்பு கிளம்பியது ஆனால் சீமான் இதனை நியாயப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் தான் இன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ ரெய்டு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. சாட்டை துரைமுருகன் வீட்டை தொடர்ந்து அங்கு கிடைத்த ஆவணங்கள், போன் பேச்சுக்கள் வழியாக இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு, ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன் ஆகியோரிடம் என்ஐஏ விசாரணை செய்தது. அவர்களின் வீடுகளிலும் ரெய்டு செய்தது.
திருச்சி வயலுரில் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து வரும் 7 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கியுள்ளனர்.
நான்கு பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழு சாட்டை துரைமுருகனின் மனைவியிடம் சம்மனை வழங்கிச் சென்றுள்ளனர். இதேபோல் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் இன்று ஆஜராக என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கிய நிலையில் அவர் பிப்ரவரி 5 ஆம் தேதி ஆஜாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான இளையான்குடியை சேர்ந்த விஷ்ணு பிரதாம், ராஜபாளையத்தை சேர்ந்த இசை மதிவாணன், தென்காசியை சேர்ந்த மதிவாணன், கோவையில் உள்ள முருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான கோவை ஆலாந்துரை ரஞ்சித் ஆகியோரது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கோவை ரஞ்சித் 10 ஆம் தேதி ஆஜராகவும், விஷ்ணு பிரதாப் 8 ஆம் தேதி ஆஜராகவும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூரை சேர்ந்த பாலாஜி என்பவரும் வரும் 5 ஆம் தேதி ஆஜராக என்ஐஏ அதிகாரிகள் சம்மன் வழங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி சம்மன் வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















