“கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் சீனர்கள் தீண்டத்தகாதவர்கள் அல்ல. எனவே அதை நிரூபிக்கும் விதமாக சீனர்களை கட்டிப்பிடிக்கும் (hug a Chinese) செயலை ஊக்குவிப்போம்” என்று பிப் 1 அன்று இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் முற்போக்கு மேயர் டாரியோ நார்டெல்லா ஆரம்பித்து வைத்த கட்டிப்பிடி வைத்தியத்தால், இன்று இத்தாலி முழுக்க கொரோனாவைரஸால் அவதி. இதுவரை 1441 பேர் இறந்திருக்கிறார்கள் இத்தாலியில் (6.8% இறப்பு விகிதம்).
சீனாவில் 3,199 என்று கூறினாலும், உண்மையில் பல ஆயிரங்கள் இருக்கும். ஆரம்பத்தில் சீனாவின் விவரங்கள் கசிய, சீனா அசிங்கப்பட்டது. இப்போது விவரங்கள் கசிவதை முழுவதும் அடக்கி விட்டது சீனா.
சீனாவின் ஊஹானில் “உயிர்க்கொல்லி வைரஸ் ஆயுதம்” உருவாக்க சீனா முயற்சித்ததாகவும், அது சீனாவின் கைமீறிப்போய் முதலில் சீனர்கள் பலியாயினர். பின்னர், சீனர்களுடன் தொடர்பிலிருந்த – இத்தாலி உள்ளிட்ட – வெளிநாடுகள். கனடாவில் இன்றும் சீன விமானங்கள் வந்திறங்குகின்றன – சீனர்கள் கனடா வந்து போகிறார்கள் என்பது ஜஸ்டின் ட்ருடோவின் மெத்தனத்துக்கு எடுத்துக் காட்டு. இத்தனைக்கும் ஜஸ்டினுக்கும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது.
இந்த மனித இன படுகொலைக்கு காரணமான சீனாவிடம் இருந்து பாதிப்படைந்த நாடுகள் நஷ்ட ஈடு கேட்க கூடாது என சீனா, “இந்த வைரசுக்கு அமெரிக்காதான் காரணம்” என்று திசை திருப்ப பார்க்கிறது. என்றாலும்… டூ லேட் சீனா!