தமிழ்த் திரைப்பட பிரபல நடிகர் விஜய், நேரடியாக அரசியலில் களம்காண தயாராகி வந்தார். அதிலும், கடந்த ஆண்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் பரிசுத்தொகை அளித்த பிறகு, கிட்டத்தட்ட அந்தச் செய்திகள் உறுதியாகின.
தமிழக அரசியலில் இரண்டு பேர்தான் தற்போது செய்திகளில் அதிகமாக காணப்படுகிறது. ஒன்று அண்ணாமலை மற்றொன்று விஜய். மேலும் சமீபத்தில் தான் நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிட்டார். தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரையும் அறிவித்தார்.
இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை.2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். மேலும் முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் கூறிவிட்டார் விஜய் .
விஜய்யின் புதிய கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.ஆளும்கட்சி விஜயகாந்துக்கு குடைச்சல் கொடுத்து போல் விஜய்க்கும் மறைமுக குடைச்சல்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளதாம். முதலில் விஜயின் சொத்துக்கள் குறித்து தகவல்களை எடுத்து வருகிறார்களாம். மேலும் முக்கியமாக விஜய்யின் மண்டபங்கள் குறித்து விவரங்கள் எடுக்கப்பட்டு அங்கு தான் குடைச்சலை ஆரம்பித்துள்ளது ஆளும் தரப்பு
சென்னையில் விஜய்யின் தாயார் ஷோபா, மகன் சஞ்சய், மனைவி சங்கீதா ஆகியோரின் பெயர்களில் பல திருமண மண்டபங்களை நடிகர் விஜய் நிர்வகித்து வருகிறார்.சென்னையில் சாலிகிராமத்தில் ஷோபா திருமண மண்டபம் வடபழனியில் ஒரு திருமண மண்டபம். அடுத்து போரூரில் சங்கீதா திருமணம் என்று மனைவியின் பெயரில் நடத்தி வருகிறார்.இது மட்டுமில்லாமல் புதுக்கோட்டையில் திருமண மண்டபம் வைத்துள்ளார். இன்னும் பல மாவட்டங்களில் திருமண மண்டபங்களை நடத்தி வருகிறார்.
முதல் சிக்கலுக்கு ஆளாகியிருப்பவை விஜய்யின் திருமண மண்டபங்கள். விஜய் வெளிப்படையாக சென்னையில் வடபழனி குமரன் காலனி, அருணாச்சலம் சாலை மற்றும் போரூர் பகுதிகளில் மூன்று திருமண மண்டபங்கள் வைத்திருக்கிறார். இவற்றுக்கு முறையான பத்திரப்பதிவுகள் உள்ளதா, மாநகராட்சியில் வருமான வரி கட்டப்பட்டுள்ளதா வேறென்ன வில்லங்கங்கள் உள்ளன என்று திருமண மண்டபங்களுக்கு குடைச்சல் கொடுத்ததுள்ளார்களாம்.
சென்னையில் உள்ளத் திருமண மண்டபத்தை தயாரிப்பாளர் லலித்திடம் மாத வாடகை 8 லட்சத்திற்கு 15 வருட ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். இப்பொழுது இந்த திருமண மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு மாத வாடகை 12 லட்சத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விட்டுள்ளதாக தெரிகிறது. இதன் முதல் கட்டமாக போரூரில் இருக்கும் சங்கீதா திருமண மண்டபம் தற்போது ரிலையன்ஸ் ட்ர்ன்ட்ஸ்ஸாக மாறி இருக்கிறது.
இன்னும் சில மண்டபங்களை இதேபோல் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு விஜய் யோசித்து வருகிறாராம். மேலும் டெல்லி வட்டாரங்களுடனும் விஜய் சுமுக உறவை கடைபிடித்து வருகிறாரம். தமிழக ஆளும்தரப்பிலிருந்து எதாவது குடைச்சல் வந்தால் டெல்லியை அணுக முடிவும் செய்யப்பட்டுள்ளதாம். டெல்லியுடன் நெருக்கமாக இருப்பதற்கு ஒரு முக்கிய பிசினஸ்மேன் தான் காரணம் என கூறுகிறார்கள். மத்திய அமைச்சர் அமித்ஷா வுடன் தான் நெருக்கம் காட்டி வருகிறார் விஜய் என்ற தகவலும் கசிந்துள்ளது.
அதே போல தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் என்ற இடத்தில் உள்ள விஜய்க்கு சம்பளம் 120 கோடி. வருடத்துக்கு ஒரு படம் மட்டுமே வெளியிடுகிறார். இவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்து அரசியல் கணக்குகளையும் அவ்வப்போது செய்து வந்தார். இது அரசியல் ரீதியான நகர்வு என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்து விட்டார்.