இண்டி கூட்டணியில் இருந்து விலகிய ராஷ்ட்ரீய லோக்தள கட்சி,பா.ஜ.க கூட்டணியில் இணைந்தது. இதனை அக்கட்சி தலைவர் ஜெயந்த் சவுத்ரி உறுதி செய்துள்ளார்.மேலும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு மக்களவையில் 2 இடம், மாநிலங்களவையில் 1 இடம் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் முடிவதற்குள் இண்டி கூட்டணி முடிந்து விடும் போல.. முடிந்து விட்டது என்றே கூறலாம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதீத பலம் வாய்ந்த பா.ஜ.கவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இண்டி கூட்டணியையை முதலில் ஆரம்பித்து வைத்தது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தான்.
இந்த நிலையில் இண்டி கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து மீண்டும் முதல்வரானார்.
முதலில் இண்டி கூட்டணியை உதறியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான். இதுவரை 5 முறை ஆலோசனை நடத்திய நிலையில், ஆரம்பம் முதலே பெரிய அளவுக்கு ஆர்வம் காட்டாமல் இருந்தார் மம்தா பானர்ஜி. அதன் பின் தனித்து போட்டி என கூறிவிட்டார். காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 40 தொகுதிகளை தாண்டாது என ஆருடமும் கூறிவிட்டார்.
அடுத்த இடியை இண்டி கூட்டணியில் இறக்கினார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்தார். மேலும் அசாமில் 3 தொகுதிக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சந்தீப் பதக் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இண்டி கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை மாதக்கணக்கில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பேச்சுவார்த்தை நடத்தி நாங்கள் சோர்வடைந்து விட்டோம். என கூறி இண்டி கூட்டணியை உதறியது ஆம் ஆத்மி
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் அஜித்சிங்கின் மகன் ஜெயந்த் சவுத்ரி. இவர் ராஷ்ட்ரீய லோக்தள கட்சி தலைவராக உள்ளார். இக்கட்சி ‛ இண்டியா ‘ கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது.
உதிர்ப்பிரேதேசத்தில் சில தொகுதிகளில் இக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. இவர் சமீபத்தில் பா.ஜ., தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால், அக்கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் எனக்கூறப்பட்டது. இன்று, சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அவரது பேரனான ஜெயந்த் சவுத்ரி வரவேற்பு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பா.ஜ.க கூட்டணியை ஜெயந்த் சவுத்ரி உறுதி செய்துள்ளார். கூட்டணி வாய்ப்பை எப்படி தவிர்க்க முடியும் எனக்கூறிய அவர், பிரதமர் மோடியின் கொள்கையை நாட்டில் வேறு எந்த கட்சியும் இதுவரை செயல்படுத்தியது கிடையாது எனக்கூறியுள்ளார்.
கேரளாவில் இண்டி கூட்டணி கிடையாது, என கம்யூனிஸ்ட் தெரிவித்துவிட்டது… இந்தநிலையில் தற்போது அந்த கூட்டணியில் யார் தான் இருக்கிறார்கள் என்ற கேள்வி அவர்களுக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் மக்கள் புரிந்து கொள்வது இண்டி கூட்டணி தவிடுபொடியானது