ஏசிஎஸ் குழுமம் சாா்பில் வேலூா் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் நலனுக்காக தொரப்பாடி ரயில்வே மேம்பாலம் அருகில் 27,000 சதுரடியில் 60 சென்ட் நிலத்தில் இலவச திருமண மண்டபம், இலவச மருத்துவ மையம், இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம், இலவச கணினி பயிற்சி மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், அகில இந்திய பாஜக துணைத் தலைவருமான சிவராஜ் சிங் செளகான் கலந்து கொண்டார்.
மேலும் வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பேரவை தொகுதிகள் வாரியாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, 6 முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது வேலைவாய்ப்பு முகாம் வேலூர் டான்போஸ்கோ பள்ளியில் நேற்று (மார்ச் 10) நடைபெற்றது.அதில், 130 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று நேர்காணல் நடத்தி, ஆயிரத்து 689 பேரை தேர்வு செய்தனர். வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பணி ஆணைகளை வழங்கினார்.
இலவச திருமண மண்டபம், இலவச மருத்துவ மையம், இலவச வேலைவாய்ப்பு தகவல் மையம், இலவச கணினி பயிற்சி மையம் கட்டப்பட உள்ள அடிக்கல் நாட்டுவிழாவிற்கு ஏசிஎஸ் குழும நிறுவனரும், புதிய நீதிக்கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், அகில இந்திய பாஜக துணை தலைவருமான சிவராஜ் சிங் செளகான் பங்கேற்று அடிக்கல் நாடினார். மேலும் வேலூா் மக்களவை தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இலவச திருமண மண்டபம் அமைக்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்
விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ம், புதிய நீதிக்கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகம் அவர்களை புகழ்ந்து தள்ளினார். அவர் பேசுகையில், மக்கள் சேவையில் மக்களுக்கான தலைவராக ஏ.சி.சண்முகம் திகழ்ந்து வருகிறாா் என கூறினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தா்.சி பேசுகையில், புரட்சி தலைவர் எம் ஜிஆா் மறைந்து 37 ஆண்டு காலமாகியும் மக்களிடையே அவா் மீது மிகப்பெரிய தாக்கம் உள்ளது. இதற்கு அவருடைய வள்ளல் தன்மையே காரணம். அதேபோல் ஏ.சி.சண்முகமும் பல நலத்திட்டங்களை செய்து வருகிறாா். ஏழைகளுக்கு உதவி செய்யும்போது அவா்கள் அடையும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை.என்றார்
மேலும் தேசிய மகளிா் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு பேசுகையில் வேலூா் மக்களவை தொகுதியில் ஏ.சி.சண்முகம் அவர்கள் வெற்றிபெற்றால் அவா் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் அவரை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றாா். உலகத்தில் பிரதமா் நரேந்திரமோடி எங்கு சென்றாலும் தமிழகத்தின் பெருமைகளை கூறி வருகிறாா். வேலூா் எம்பி தொகுதியில் ஏ.சி.சண்முகம் வெற்றி பெறுவாா் என்ற நம்பிக்கை உள்ளது. ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்று மத்திய அமைச்சராவது உறுதி என்றாா்.
வேலூர் மக்களவை தொகுதியில் ஏசிஎஸ் குழுமம் சாா்பில் இதுவரை 294 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி, 1.90 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனையும், 3,800 பேருக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளோம். மேலும், 7 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம், சுமார் 13 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கிரிக்கெட், கபடி, மாரத்தான் போன்ற பல்வேறு போட்டிகளும், போதைப்பொருட்களைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வாணியம்பாடியில் நடத்தப்படவிருந்த மாரத்தான் போட்டிக்கு காவல்துறை உரிமம் இல்லை எனக் கூறி தடை செய்துவிட்டது.
பதவியில் இருக்கக்கூடியவர்கள் அச்சப்படுகின்றனர். முன்னாள் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், போதைப்பொருட்களுக்கு எதிராக நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டி மாநில அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால்தான், இந்த போட்டிக்கு தடை விதித்தனர் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி, மாநில செயலா் வெங்கடேசன், வேலூா் மாவட்டத் தலைவா் மனோகரன், புதிய நீதிக்கட்சி வேலூா் மாவட்டத் தலைவா் பாலாஜி, மாவட்டச் செயலா் பரத், மாநகர செயலா் குமரகுரு உள்பட பலா் பங்கேற்றனா். நிறைவில், ஏ.சி.எஸ் குழுமத்தின் செயலா் ரவிக்குமாா் நன்றி கூறினாா்.