சர்வதேச போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தமிழகத்தை சேர்ந்த தயாரிப்பாளரும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அமலாக்க துறையும் ஜாபர் சாதிக் மீது வழக்கு பதிந்துள்ளது. இதற்கு காரணம் ‘கடத்தல் தொழில் வாயிலாக சாதிக் சம்பாதித்த பணம் எப்படி, யார் யாருக்கு கொடுக்கப்பட்டது. பயங்கரவாத செயல்களுக்கும் இந்த பணம் செலவிடப்பட்டதா’ என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது.
ஜாபர் சாதிக்கின் எட்டு வங்கிக் கணக்குகள், முகமது சலீம் மற்றும் மைதீனின் ஆறு வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அவற்றில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்க, மூவரும் நிதியுதவி செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து, என்.ஐ.ஏ.,எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022ல் குண்டு வெடிப்பு நடத்திய ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார்.இவரது தலைமையில், 12க்கும் மேற்பட்டோர் தற்கொலை படையினராக மாறி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுதும் பல கட்டங்களாக சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்யப்பட்டது.
அப்போது சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியது சிக்கிய ஆவணங்களை சோதனை மேற்கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு , பயங்கரவாத செயல்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்ட வாலிபர்களுக்கு, சென்னை, கோவையில் இயங்கி வரும் அரபிக் கல்லுாரியில் தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு அரபிக் கல்லுாரிகளின் பேராசிரியர், முன்னாள் மாணவர்கள் கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தார்கள். மேலும் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்களின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், சில பணப் பரிவர்த்தனைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடந்து வங்கி கணக்குகளின் விபரத்தை, டில்லியை சேர்ந்த தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, மற்றும் அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள ஜாபர் சாதிக், மற்றும் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் அரபிக் கல்லுாரி பேராசிரியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்கவும், ஆயுதப் பயிற்சி அளிக்க நிதியுதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் உள்ளிட்டோர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அரசியல்வாதிகள், சினிமா புள்ளிகள் என பலர் போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளதால், இந்த விசாரணையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரடியாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு என இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டிருப்பதால், அஜித் தோவலே நேரடியாக களம் இறங்கி விட்டாராம். மேலும் தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசும் அமைப்புகளையும் தீவிர கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளது தேசிய புலனாய்வு அமைப்பு. அதன் ஒருபகுதி தான் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் நடந்த சோதனை.
விசாரணையில் என்ன தகவல் கிடைத்துள்ளது; எந்த அளவிற்கு முன்னேற்றம் போன்ற பல விஷயங்கள் அறிக்கையாக தோவலுக்கு அனுப்பப்பட்டு வருகிறதாம்; மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விசாரணையை கண்காணிக்கிறாராம்.’தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர், போதை பொருள் கடத்தல் தொடர்பாகவும் பேசினார். இதிலிருந்து, இந்த விவகாரத்திற்கு மத்திய அரசும், மோடியும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதனால் தான், இந்த விவகாரத்தில் நேரடியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகரே இறங்கிஉள்ளார்’ எனவும் சொல்லப்படுகிறது. விவகாரம் பெரிதாகி கொண்டே போவதால் தமிழகத்தில் சுனாமி வீசகூடும் அதில் பல அரசியல் தலைவர்கள் முதல் பிரிவினைவாதம் பேசும் அமைப்புகள் எல்லாம் சிக்கி சின்னாபின்னமாகும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றார்கள். முதல்வர் முக ஸ்டாலின் உதயநிதி உதயநிதி மனைவி கிருத்திகா உதயநிதி என அணைத்து முக்கிய தலைகளுடன் தொடர்பில் இருப்பது போல் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் போட்டோ எடுத்து கொண்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.