கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி நிகழ்த்திய உரை
- உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.
- உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா.
- தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை.
- கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
- ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.
- திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது.
- கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
- சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது.
- மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது.
- 130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
- மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.
- கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது.
- நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும் – இதுவே நம் தாரக மந்திரம்.
- முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
- வீட்டில் இருந்தே பணி செய்யும் முறைக்கு மாற வேண்டும்.
- இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது.
- தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.
- மார்ச் 22 ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு என்பதை தாண்டி மேலும் ஒரு விஷயத்தையும் கேட்கிறேன்.
- தங்களை பற்றி கவலை கொள்ளாமல் மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்கள்…
- செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், உணவு விநியோகம் செய்வோர்….
- அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்போர் வேலை செய்கின்றனர்.

வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு அனைவரும் கைதட்டியும், கரகோஷம் எழுப்பியும்…
- நமக்காக பணியாற்றுவோரை உற்சாகப்படுத்த வேண்டும்- மோடி
“உங்களுக்கு ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், அவசரமில்லை என்றால் தள்ளிப்போடுங்கள்”
தற்போது வேலைக்கு வரமுடியாமல் போகும் தொழிலாளர்களின் சம்பளத்தில் கை வைக்காதீர்”
- “பொதுமக்கள் பதற்றம் அடைந்து பொருட்கள் வாங்கி பதுக்க வேண்டாம்”
“எப்போதும் போல் உங்கள் தேவைக்கு மட்டும் பொருட்களை வாங்குங்கள்”
காணொளி மூலம் இன்று நாட்டுமக்களிடையே பேசி பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















