நாட்டுமக்களிடேயே தேசபக்தியை வளர்க்க பாரத பிரதமர் நரேந்திரமோடி பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
இந்நிலை ஆங்கிலேயர்களிடமிருந்து பாரதம் சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதியை நாம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறோம். பிரதமர் மோடியும் அன்று மக்களுக்கு தேசபக்தியை ஊக்குவிக்கும் விதத்தில் புதுப்புது டாஸ்குகளை செய்ய சொல்லி உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் வருகிற வியாழன் அன்று இந்தியா தன்னுடைய 78 வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. இதையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைவரின் வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி அதனுடன் செல்ஃபி எடுத்து, படத்தை ‘ஹர் கர் திரங்கா’ hargartiranga.com. இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடியும் எக்ஸ் பதிவில், “இந்த ஆண்டு சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் ஹர் கர் திரங்காவை (அனைவரின் வீட்டிலும் மூவர்ணக்கொடி) மறக்கமுடியாத இயக்கமாக மாற்றுவோம். நான் எனது சுயவிவரப் படத்தை மாற்றுகிறேன், இதன் மூலம் நமது மூவர்ணக் கொடியைக் கொண்டாடுவதில் என்னுடன் நீங்களும் இணையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் செல்ஃபிகளை https://hargartiranga.com இந்த சமூக வலைத்தளத்தில் பகிரவும்”. இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். மேலும் அவரின் எக்ஸ் வலைத்தள சுயவிவர படத்தை மாற்றி நமது தேசிய கொடியை வைத்துள்ளார். இதனை தொடர்ந்து பாஜக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களுடைய சுயவிவர புகைப்படத்தை மாற்றி வருகின்றனர்.
சமீபத்தில் பிரதமர் மோடியின் எக்ஸ் TWITTER வலைத்தள பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையானது 100 மில்லியனை தொட்டது. இதற்கு பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது.