முஸ்லிம்களில் இரு பெரும் பிரிவுகளில் 85 சதவீதம் சன்னி பிரிவினரும், 15 சதவீதம் மட்டுமே ஷியா பிரிவினரும் வாழ்கின்றனர். இந்த இரு பெரும் பிரிவுகளுக்கு இடையிலான போராட்டம், பிளவு நேற்று இன்று உருவானது அல்ல, 7-ம் நூற்றாண்டில் இருந்தே இந்த இருதரப்புக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து வருகிறது.
இதில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கு ஆசியா, சீனா, தெற்காசியா, ஆப்பிரிக்கா, அரேபிய நாடுகளில் வசிக்கின்றனர்.இராக், பஹ்ரைன், ஈரான், அசர்பைஜன் ஆகிய நாடுகளில் ஷியா பிரிவினரும், சிரியா, குவைத், ஏமன், லெபனான் பாகிஸ்தான், குவைத், சிரியா ஆகிய நாடுகளில் அரசியல்ரீதியாக முக்கியத்துவமான பதவிகளில் ஷியா பிரிவினரும் வசிக்கின்றனர்.
லெபனானின் சியா முஸ்லிம்களின் ஆதரவு பெற்ற அமைப்புதான் ஹிஸ்புல்லா. இந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இரு தினங்களுக்கு முன் இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்தார்.வெள்ளிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் நஸ்ரல்லா உட்பட ஹெஸ்பொலாவின் மூத்த தளபதிகள் பலரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.இதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையேயான மோதல் தீவிரமாகியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், இந்த போரில் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக லெபனான் எல்லையில் செயல்படும் ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது. இதனால் இப்போது இஸ்ரேலின் போர் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது.போரானது தீவிரமடைந்துள்ளது லெபனான் மீது கடந்த சில நாட்களாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தரை வழி தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது.
சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் அதிகமான லெபனான் மக்கள் உயிரிழந்தனர். லெபனான் எல்லையில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா அமைப்புக்கு ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் உதவி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது இஸ்ரேல் லெபனானை தாக்க ஹெஸ்புல்லா அமைப்பும், ஷியா முஸ்லீம்களும்தான் காரணம் என கொதித்தெழுந்த சன்னி பிரிவு முஸ்லீம்கள் கலவரத்தில் இறங்கியுள்ளனர்.
இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் அவர்கள் ஷியா பிரிவு இஸ்லாமியர்களை கொலை செய்துள்ளனர். இதனால் இரு பிரிவினரிடையே பல பகுதிகளில் பெரும் மோதல் எழுந்துள்ள நிலையில் லெபனான் கலவர தேசமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
லெபனானில் ஹிஸ்புல்லாக்களுக்கு பயந்து இதுவரை அடங்கி இருந்த ஷன்னி முஸ்லிம்கள் ஹிஷ்புல்லா இயக்க தலைவர் ஹசன் நஸ்ருல்லாவின் மரணத்திற்கு பிறகு தற்போது வெளியேவர ஆரம்பித்துளார்கள் மேலும் ஷியா முஸ்லிம்களை தாக்க ஆரம்பித்து விட்டார்கள். அதே மாதிரி ஹிஸ்புல்லாக்க ளுக்கு பயந்து இதோ வரை அமைதியாக இருந்த லெபனான்கிறிஸ்தவர்களும் இனி லெபனானை மீண்டும கிறிஸ்தவ நா
டாக கொண்டு வருவோம் என்று முழங்க ஆரம்பித்து விட்டார்கள் லெபனானில் ஷியா முஸ்லிம்கள் 28% ஷன்னி முஸ்லிம்கள் 27% இருக்கிறார்கள்.சுமார் 42% அளவில் கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள்.
இப்பொழுது ஹிஸ்புல்லாக்கள ன் வீழ்ச்சியினால் லெபனானில் ஷியா முஸ்லிம்களின் ஆதிக்கம் வீழ்ந்து ஷன்னி முஸ்லிம்கள்மற்றும் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் லெபனானில் ஏற்பட இருக்கிறது.இதைத்தான் சவுதி அரேபியா எகிப்து போன்ற ஷன் னி முஸ்லிம் நாடுகளும் அமெரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகளும் விரும்புகின்றன.