1998 ஆம் ஆண்டு, கோயம்பத்தூர் குண்டு வெடிப்பு தாக்குதல் 1998 பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்தது. இந்த தாக்குதல் பல இடங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டுகள் வெடிக்கச்செய்யப்பட்டது. இதனால் 58 பேர் உயிரிழந்தார்கள் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். அன்றே ஜவுளி வியாபாரத்தின் உச்சத்தில் இருந்து பெரும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. கோவையில் நடந்த குண்டு வெடிப்பு இதயத்தை பதற வைத்தது. கோவை நகரத்தின் அமைதியைக் குலைத்து, குண்டு வெடிப்பானது மக்கள் அதிக அளவு கூடும் இடங்களிலும் தொழில் அதிகளவு நடைபெறும் இடங்களிலும் பிரசவம் பார்க்கும் மருத்துவமனையிலும் தொடர் குண்டு வெடிப்பானது நடைபெற்றது. இதன் பின்னணியில் இஸ்லாமிய அல் உம்மா தீவிரவாதிகள் தொடர்புடையவர்களாக கண்டறியப்பட்டு காவல்துறையினர் அவர்களை கைது செய்து ஆயுள் தண்டனை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இஸ்லாமிய தீவிரவாதி, ஆல் உம்மா நிறுவனர் பாஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் இஸ்லாமிய மக்கள் பலர் அவருடைய உடலை பெற்று ஊர்வலமாக போக அரசிடம் அனுமதி பெற்றுள்ளார்கள். கோவை பூமார்கெட் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்த வெடிப்பில் தொடர்புடையதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவரின் சமீப கால மரணம் தமிழகத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அத்தகைய ஒரு குற்றவாளியின் இறப்பு, சில அரசியல் தலைவர்களின் ஆதரவும் ஆளுமைகளின் எதிர்ப்பும் மிகுந்த விமர்சனத்தை உருவாக்கியது.
குறிப்பாக, சீமான் மற்றும் தனியரசு போன்ற அரசியல் தலைவர்கள், அந்த குற்றவாளியின் இறப்புக்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர். இது மக்களிடையே மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், கோயம்புத்தூரில் பெரிய அளவில் எதிர்ப்பு பேரணி இன்று 20 டிசம்பர் 2024, . அரசு தீவிரவாதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதை கண்டிக்கும் விதமாக, இந்த பேரணி தமிழ்நாட்டில் ஒற்றுமை மற்றும் சட்டமே முதன்மை என்பதற்கான முக்கியமான செய்தியை ஒளிபரப்பியது.
இந்த விவகாரம் மற்றொரு கேள்வியையும் எழுப்புகிறது. ஒரு தீவிரவாதியின் இறப்பை தியாகம் போல வெளிப்படுத்திய அரசியல் வாதிகள், முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் போன்ற ஒரு உயர்ந்த தலைவரின் இறப்புக்கு அதே மரியாதையைக் காட்டியிருக்கிறார்களா? சமூகத்திற்கு தீங்கு விளைவிக்க நினைத்த ஒருவரை “தியாகி” எனச் சித்தரிப்பதன் மூலம், சமூகத்துக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
இஸ்லாமியர் மத்தியில், பாஷா போன்றவர்கள் ஒரு போராளி போல் சித்தரிக்கப்படுவது, சமூகத்தில் தீவிரவாதத்தின் ஆதரவை உருவாக்கும் அபாயத்தை மிகுந்த கவலையுடன் நாம் பார்க்க வேண்டும்.அத்துடன், இந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள், அப்பாவி மக்கள், குழந்தைகள், மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்ற சாதாரண மக்கள் என்பதை மறக்கக் கூடாது. இவர்கள் எந்த அரசியல் சார்பும் இல்லாதவர்கள். இதனால், தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஒரு சமூகமாக நாம் மாறக்கூடாது. இது ஒரு மிகப்பெரிய அபாயம், மேலும் அரசின் முடிவுகள் இதற்க்கு எதிராக இருக்க வேண்டும்.இந்த மாபெரும் விவகாரம் தமிழ்நாட்டில் தீவிரமான சமூக விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒற்றுமை மற்றும் சமூகத்தின் நலனுக்காக, நாம் இவ்வாறு நிகழ்வுகளை புரிந்துகொண்டு தகுந்த முடிவுகள் எடுக்க வேண்டும்.
கட்டுரை:-ஹரி சங்கர்,கோவை