அண்மையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த அமலாக்கத்துறை, 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றம்சாட்டி, அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.மேலும், தனியார் நிறுவனங்களுக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் முந்தைய நிதியாண்டை காட்டிலும், கடந்த நிதியாண்டில் கூடுதலாக ரூ.2,488 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான விற்பனை:
மதுபான ஆயவிலக்கத்துறை மீதான மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தின் தமிழ்நாடு அரசு சார்பிலான கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் கடந்த நிதியாண்டில் மட்டும் 48 ஆயிரத்து 344 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ஆயத்தீர்வை வருவாயாக 11 ஆயிரத்து 20 கோடியே 43 லட்ச ரூபாயும், விற்பனை வருவாயாக 37 ஆயிரத்து 323 கோடியே 57 லட்சம் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் வருவாய்:
கடந்த நிதியாண்டின் மதுபான விற்பனையானது முந்தைய நிதியாண்டில் விற்பனையான 45 ஆயிரத்து 855 கோடி ரூபாயை காட்டிலும், 2 ஆயிரத்து 488 கோடி ரூபாய் அதிகமாகும். அதவாது 2023-24 நிதியாண்டை காட்டிலும், 2024-25 நிதியாண்டில் தமிழக டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரத்து 488 ரூபாய்க்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றுள்ளது. அயல்நாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்ததன் மூலமாக 2024-25 -ஆம் ஆண்டில் (31.03.2025 வரை) சிறப்புக் கட்டணமாக அரசுக்கு ரூ.62.88 கோடி மற்றும் சேவைக் கட்டணமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு ரூ.32.52 இலட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
பீர் ஏற்றுமதி:
தமிழ்நாட்டிலிருந்து மற்ற மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், பிற நாடுகளுக்கு 21,80,465 பெட்டிகள் (cases) பீர் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் ரூ.777.07 லட்சம் வருவாய்
ஈட்டப்பட்டுள்ளது. ஆயவில்லைகளின் விற்பனை மூலம் 26 கோடி ரூபாய் நிகர வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடை விவரங்கள்:
தமிழ்நொடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் 38 மாவட்ட அலுவலகங்களும், 43 இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானக் கிடங்குகளும், 4,787 மதுபான சில்லரைவிற்பனைக் கடைகளும் , இக்கடைகளுடன் இணைந்து 2,362 மதுக்கூடங்களும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 629 பேர் பணியாற்றுகின்றனர்.
குற்ற தடுப்பு நடவடிக்கைகள்:
குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கடந்த மார்ச் மாதம் வரை, 952 கள்ளச்சாராய ழக்குகள் பதிவு பசய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக 1,042 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 17,937 லிட்டர் கள்ளச் சாைாயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றங்களை தடுக்க கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 6 லாரிகள், 51 கார்கள், 10 ஆட்டோக்கள் மற்றும் 494 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 561 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கள்ளச்சாராயக் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 121 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கதறும் தாய்மார்கள்:
டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைத்து, முழு மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பதே தமிழக தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், ஆண்டிற்கு ஆண்டு மதுபான விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவது, தாய்மார்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















