ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் பரிதாபமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தால் இரு நாடுகளுக்கிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டின் சார்பில் பல்வேறு தடை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக அஸ்ஸாம் எதிர்க்கட்சி எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் பேசிய வீடிய சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்துதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சீத்தின் லஷ்கர் இ தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காமில் உள்ள புல்மேடு சுற்றுலாத் தலத்துக்குள் 4 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கியால் சுட்டு சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கரவாததாக்குதலில் 27 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் மகாராஷ்டிரம், தமிழகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியா மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இரு நாட்டுக்கிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து பாகிஸ்தானின் முக்கிய நீராதாரத்தை இந்தியா தடை செய்துள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலும், புல்வாமா தாக்குதலும் மத்திய அரசின் சதி என்று அஸ்ஸாம் மாநிலத்தின் எதிர்க்கட்சி எம்எல்ஏ அனுமில் இஸ்லாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்த அஸ்ஸாம் காவல் துறையினர், அவரை அதிரடியாக கைது செய்தனர்.
அஸ்ஸாம் மாநிலத்தின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்தவர் அனுமில் இஸ்லாம். இவர், அஸ்ஸாமின் திங் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுளளார். பஹல்காம் தாக்குதல் குறித்து இவர் பேசியுள்ள காணொலிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பஹல்காம் தாக்குதலும், புல்வாமா தாக்குதலும் மத்திய அரசின் சதித்திட்டம் என்று பேசியுள்ளார்.
அனுமில் இஸ்லாம் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ள நிலையில், தேசத் துரோக பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்த அஸ்ஸாம் காவல் துறையினர், நாகோன் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று மாலை அதிரடியாக கைது செய்தனர்.
இதுகுறித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தெரிவித்து வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக எம்எல்ஏ அமினுல் இஸ்லாமின் பேசிய வீடியோக்கள் பரவி வரும் நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதுகுறித்து, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் மௌலானா பதருதீன் அஜ்மல் கூறுகையில், “அனுமில் இஸ்லாமின் கருத்துக்கும், தங்களது கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பஹல்காம் விவகாரத்தில் எங்கள் கட்சி அரசுக்கு துணையாக நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















