சமயசார்பற்ற திமுக கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை காண ஆவலோடு எதிர்பார்த்திருகின்றது தமிழகம்
ஆம், எவ்வளவு இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இன்னும் எல்லா சாதிக்கும் குறிப்பாக தாழ்த்தபட்டோருக்கும் அவர்களின் உள் ஒதுக்கீட்டுபடியும் எவ்வளவு சீட்டுக்கள் வழங்கபடும் என எதிர்பார்ப்பு எகிறியிருகின்றது
பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு உண்டா என்பதும் இப்பொழுது எழும் எதிர்பார்ப்பு
முன்பு 15 ஆண்டுகாலம் திமுக மத்தியில் இருந்தபொழுதும் கிறிஸ்தவருக்கும் இஸ்லாமியருக்கும் மந்திரி பதவி இல்லை
கருணாநிதி ஆட்சியிலும் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் பெரும் துறைகளும் அதிகாரமும் ஒதுக்கபடவில்லை
ஆனால் இம்முறை திமுக ஆர்மி ஜெனரல் திமுகவின் தவறுகளை திருத்த கிளம்பியிருப்பதால் அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டத்தை டெலஸ்கோப் வழியாக பார்த்து படம் வரைந்து கொண்டிருப்பதால் இந்த தேர்தலில் சுமார் 100 தொகுதிகளில் இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் நிறுத்தபடுவார்கள் எனவும்
மீதி 50 தொகுதிகளில் தாழ்த்தபட்ட அடிமட்ட மக்கள் நிறுத்தபட்டு அவர்களுக்கு மந்திரி சபை உறுதிமொழியும் வழங்கபடும் என எதிர்பார்க்கின்றது தமிழகம்
100+50 ஆக 180 தொகுதி.. ச்சீ… 150 தொகுதி
மீதியுள்ள தொகுதியெல்லாம் மகளிரை நிறுத்தி புரட்சி செய்வார்கள் எனவும் எதிர்பார்த்து காத்திருகின்றது தமிழகம்
அப்படியே பாசிச மதவாத பாஜகவினை எதிர்த்து வீரமணி, சுபவீ மதிமாறன் போன்ற போராளி சிங்கங்களையும் கருப்பர் கூட்ட இம்சைகளையும் பிரச்சாரத்துக்கு அழைத்து வருவார்கள் எனவும் ஒரு நம்பிக்கை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்றது
சமூக நீதி, பகுத்தறிவினை காக்க அவர்கள் நிச்சயம் திமுகவினர் இவர்களை அழைத்து வருவார்கள், வரவேண்டும்