ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளனஇன்றைய பலன் 18.10.2025
மேஷம் ராசி அன்பர்களே இன்று,பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வர வேண்டிய பணம் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர்.
ரிஷப ராசி அன்பர்களே இன்று,எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். திருமணம் கோலாகலமாக நடக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும்.தேகம் பளிச்சிடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மிதுனம் ராசி அன்பர்களே இன்று,மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு. நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். பிடித்த வெளியூர் பயணம் செல்வீர்கள். மருத்துவர்கள் செழிப்பர். தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். யோகாவில் மனம் லயிக்கும்.
கடக ராசி அன்பர்களே இன்று ஒரு சிலருக்கு காதல் கண் சிமிட்டும். பெற்றோரை மனதில் வைப்பது நலம். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். நினைத்த காரியம் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது.
சிம்ம ராசி அன்பர்களே இன்று பண வரவு தாமதப்படும். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உடல் ஆரோக்கியம் சீர்படும்.
கன்னி ராசி அன்பர்களே இன்று உடன் பிறந்தவர்கள் உதவுவர். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும்.
துலாம் ராசி அன்பர்களே இன்று தேகத்தில் உற்சாகம் வெளிப்படும். உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். அரசியலில் நாட்டம் ஏற்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வர். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். சகோதர வகையில் உதவிகள் உண்டு.
விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்றுவருவீர்கள். பணவிசயங்களில் ஒருமுறைக்கு இருமுறை கவனம் தேவை. உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவுவர். பெற்றோரின் கனவு பலிக்கும்.
தனுசு ராசி அன்பர்களே இன்று உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். அரசியலில் நாட்டம் கூடும். நண்பர்கள் கைக் கொடுப்பர். முகம் புதுப்பொலிவு கூடும்.குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர்.
மகரம்ராசி அன்பர்களே இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
கும்பம் ராசி அன்பர்களே இன்று அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உறவினர்களால் நன்மை உண்டு. உடல் வலிமை உண்டாகும்.
மீனம் ராசி அன்பர்களே இன்று விருந்தினர்கள் வருவர். இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். உடல் நலம் சுகம்பெறும். பங்குச் சந்தை லாபம் தரும். நண்பர்கள் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















