இந்த சண்டைதான் அங்கு இழுத்து கொண்டிருக்கின்றது
உண்மையில் இந்தியாவின் ஊரடங்கு சில சிக்கல்களை இழுத்துவிட்டது, உதாரணம் மிகுந்த விலை கொடுத்து வாங்கிய பெட்ரோல் விற்கபடாமல் கிடக்கின்றது, சல்லி விலையில் சவுதி ரஷ்ய தள்ளுபடி ஆபரில் கொடுக்கும் பெட்ரோலை வாங்கி நிரப்ப குடோன் இல்லை
பெரும் விலை கொடுத்து வாங்கிய பெட்ரோலை இந்திய மக்கள் வாங்காவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும்
மோடி இந்தியாவின் ஊரடங்கை விலக்க நினைக்கும் மர்மங்களில் இதுவும் ஒன்று, இன்னொன்று ரஷ்ய பாணி
ஆம் புட்டீனும் கொரோனாவில் தலைகீழ் முடிவெடுக்கின்றார், 8 ஆயிரம் பேர் பாதிக்கபட்ட ரஷ்யாவில் ஊரடங்கு இல்லை, மருத்துவர் அவர்கள் வேலையினை பார்ப்பார்கள், நாம் நம் வேலையினை எச்சரிக்கையுடன் பார்க்கலாம், எல்லோரும் முடங்கிவிட்டால் பொருளாதாரம் என்னாவது என்பது அவரின் கேள்வி
ரஷ்ய மாடலை இங்கும் பின்பற்ற விரும்புகின்றார் மோடி, பொருளாதாரம் பாதிக்கபடுவதை அவர் அனுமதிக்கவில்லை
ஆனால் இந்தியாவின் மக்கள் தொகைக்கும், நெருக்கத்துக்கும் புட்டீன் மாடல் சரிவராது, மாநில அளவில் இது பெரும் சர்ச்சையாகும் நாளையெ கொரோனா வெடித்தால் பதில் சொல்ல மோடியினை இழுப்போம் என்கின்றன மாநில கட்சிகள்
விஷயம் இழுத்து கொண்டிருக்கின்றது, விருப்பமே இல்லாமல் நாளை அல்லது இன்று இரவில் மோடி தடையினை நீட்டிக்கலாம், அல்லது புட்டீன் வழியில் இறங்கினாலும் இறங்கினாலும்
ரஷ்ய மாடலில் மோடி இறங்கினாலும் ஒரு வாரத்தில் மறுபடியும் இந்தியா இழுத்து மூடபடும் என்பதும் இன்னொரு கோணம்…
கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















