1.துப்பாக்கி சூட்டுக்கு முன்னால்
முதலாம் உலகப்போர் முடிந்ததும் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியமக்களுடன் இணக்கமாக போகும் என்ற எண்ணம் வீணாகியது .
கொள்ளை பேதி மலேரியா ப்ளேக் போன்ற வியாதிகள் வர அரசாங்கம் கையை கட்டிக்கொண்டிருந்தது
இறப்பு 1.5 கோடி மக்கள் .
தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கமும் அதை தொடர்ந்து ரௌலட் சட்டமும் கொண்டுவரப்பட்டது
இந்த சமயத்தில் இந்தியாவிலே அதிக ஆர்ப்பாட்டங்கள் பெரிய பெரியபங்களிப்பு கொடுத்த மாநிலம் பஞ்சாப் தான் .
இது அம்மாநிலத்தின் லெப்பிடினன்ட் கவர்னர் டயரை இது கடும் கோபம் கொள்ள செய்தது .
காங்கிரசால் மார்ச் 30 அறிவிக்கப்பட்ட பந்த், அதன் பின் 6 ம் தேதிக்கு மாற்றப்பட்டது .ஆனாலும் அந்த மாறுதல் அறிவிப்பு தாமதமாக வந்ததால் 30 லிருந்து தொடர்ந்து கூட்டங்கள் போராட்டங்கள் ஹர்தால்கள் நடந்ததுகொண்டே இருந்தது பஞ்சாபில் .
நடுவே ராமநவமி ஊர்வலமும் வந்தது .
மாநிலத்தின் இருபெரும் தலைவர்கள் டாக்டர்கள் சிக்கலு, சத்யபால் . இருவரும் மக்களை அமைதியாக சத் யா கிரகவழிபடி நடத்தினர்.
ஆனாலும் எதாவது ஒருவகையில் மக்களை தூண்டி வன்முறை நடத்த கவர்னர் துடித்து கொண்டிருந்தான்
மக்கள் அசரவில்லை .
ராமநவமி ஊர்வலம் சில பிரிட்டிஷ்காரர் கள் வீடுகள் வழியே செல்லும்போது இங்கிலாந்து தேசிய கீதம் இசைத்து தங்களுக்கு துவேசம் இல்லை காட்டினர் மக்கள் ..
ஆனாலும் அங்கங்கே சில கல்லெறிதல் அலுவலக முற்றுகைகள் ஏற்பட்டது . இருந்த சொற்ப படைகளுடன் சில துப்பாக்கி சூடுகள் நடந்தது .
சிலர் இறக்க அவர்களின் சவ ஊர்வலங்களும் பதட்டத்தை கூட்டியது .
நடுவே அந்த இரு தலைவர்களும் கைது செய்யப்பட அதற்கு கண்டன தீர்மானங்கள் நிறைவேறின ..
இந்த நிலையில் டயரின் வேண்டுகோளின்படி பெரும்படை வந்து சேர்ந்தது அமிர்தசரசுக்கு .
ஆவலுடன் இதை எதிர்நோக்கி இருந்த டயர் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்த அந்த 13 ம் தேதியை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தான் .
2.துப்பாக்கி சூடு
முந்திய நாட்களில் வெகு வெற்றிகரமாக நடத்தப்பட்ட ஹர்த்தால் டயரின் கொதிநிலையை கூட்டி இருந்தது
கூட்டம் நடக்கும் நாளில் தடை ஆணை பிறப்பிக்க பட்டது
4 பேரூக்கு மேல் போக கூடாது.
பிணத்தையும் நாலுபேர் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.
8 மணிக்கு மேல் வெளியே வந்தால் சுடப்படுவார்கள்
ஆனால் மாலை 2 மணிக்கே கூட்டம் ஜாலியான் வாலா பாக்கில் கூட தொடங்கியது
அந்த இடம் நாலு பக்கமும் சுவர் கட்டிடங்கள் உள்ள ஒரு மேடு பள்ளமான இடம்
நடுவே ஒரு கிணறு இருந்தது ..நுழையும் இடம் குறுகலான வழி ….இன்னும் இரண்டு மூன்று தெருக்களும் இங்கே வந்து முடியும்
கூட்டம் தொடங்கி 20000 பேர் இருந்தனர்
டயர் தன் படைகளுடன் புறப்பட்டான் .
90 வீரர்கள் இரண்டு கவசவண்டிகள் அவனுடன் சென்றன
மைதானதுக்குள் கவசவண்டிகள் நுழைய முடியவில்லை
தன் இருபக்கமும் தலா 25 வீரர்களை நிறுத்திவைத்து விட்டு உடனடியாக சுட உத்திரவிட்டான்
முதலில் சுட்டவர்களில் சிலர் வானத்தை நோக்கி சுட டயர் அவர்களை பார்த்து கத்தினான் கீழே சுடு உன்னை அழைத்து வந்தது அதற்காகதான்.
கிட்டத்தட்ட 1700 குண்டுகள் வெடித்தன .
மக்கள் ஓட இடமில்லாமல் குண்டடிபட்டும் கூட்டத்தில் நசுங்கியும் கிணற்றில் மொத்தமாக விழுந்து நசுங்கி மூச்சடை பட்டும் இறந்தனர்
மைதானமெங்கும் இரத்தம் வழிந்து ஓடியது
கவசவண்டி உள்ளே கொண்டுவரமுடியவில்லையே என்ற ஏமாற்றமும் இன்னும் சுட குண்டுகள் இல்லாமல் போய் விட்டதே என்ற வ்ருத்தமும் மிஞ்ச டயர் திரும்பினான் ..
ரத்தன் தேவி என்ற பெண் இறந்த கணவனின் உடலை இரவெல்லாம் நாய் கடிக்காமல் காவலிருந்து பின் காலையில் கொண்டுவந்தாள் …
அங்கெ அந்த பிணக்குவியலுடன் காயங்களுடன் கதறியவர்களின் அலறலையும் கைகால் இழந்து துடித்து கொண்டிருந்தவர்களையும் உடலின் ஒருபக்கம் சிக்கி தலையை மட்டும் நீட்டி கெஞ்சுவதையும் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டு கதறியவர்களையும் அவர்களை சில நாய்கள் கடித்ததையும் இன்னும்…..போதும் அதற்கு மேல் அதை எழுத விரும்பவில்லை நான்
- துப்பாக்கி சூட்டுக்கு பின்
மாலை துப்பாக்கி சூடு முடிந்து பின் ஆயிரக்கணக்கானவர்கள் காயங்களுடன் இரத்தம் வழிய அங்கேயே கிடந்தனர்
இரவு எட்டுமணிக்கு மேல் வந்தால் சுடுவேன் என்று டயர் சொன்னதால் காலையில்தான் மக்கள் வந்தனர்
இரவு பத் துமணிக்கே அப்படிய யாராவது வந்தால் சுட டயர் படைகளுடன் வலம் வந்தான்
அடுத்தநாள் காலை மார்ஷல் லா பிரகடனப்படுத்தப்பட்டது . மக்கள் முழு அடிமைகளாக நடத்தப்பட்டனர்
பிரிட்டிஷ்ஷார் தாக்கப்பட்ட தெருக்களில் இந்துக்கள் தவழ்ந்துதான் நடக்க வேண்டும் என்று உத்திரவிட பட்டிருந்தது .
வெள்ளையர்கள் யாரை பார்த்தாலும் இந்தியர்கள் ஸலாம் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் .
குருடன் ஒருவனை கூட அவன் தவழ்ந்து செல்லவில்லை என்று அடித்து துவைத்தார்கள் .
சிறுவர்களை பிடித்து சக்கரம் ஒன்றில் கட்டி சுற்றி சுற்றி அடித்தார் கள் . மயங்கியவர்களுக்கு தண்ணீர் கொடுத்து தெளியவைத்தது அடித்தார்கள்
அந்த தெருக்களில் காயம் நோய்வாய் பட்டவர்களை கவனிக்க மருத்துவர்கள் வரவில்லை . ஏனென்றால் மருத்துவர்களும் தவழ்ந்துதான் வரவேண்டுமென்று கட்டாயப்படுத்த பட்டார்கள்… இல்லாவிட்டால் துப்பாக்கி பேசும்
அப்படித்தான் சுடுவேன் …கவசவண்டி கொண்டுபோகமுடியவில்லயே என்று வ்ருத்தம் உண்டு .கொண்டு போக முடிந்திருந்தால் இன்னும் நிறையபேரை கொன்றிருக்கலாம் என்றான் டயர்…
இந்திய தலைவர்கள் மக்களை காக்கவேண்டிய தலைவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா..
மனதை திடப்படுத்திக்கொண்டு படியுங்கள்.
இதை விசாரிக்க காங்கிரஸ் ஒரு கமிட்டி அமைத் தது
அதன் முடிவுகள் பற்றி காந்தி இப்படி சொன்னார் :
என்னுடைய உத்தரவின் பேரில் ஜெனரல் டயரை prosecute செய்யவேண்டாம் என்று அந்த குழு சொல்லிவிட்டது .
அவரது இதயத்தை நாம் வெல்ல வேண்டுமே தவிர உடலை அல்ல .
பாருங்கள் இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்தை நடத்தியதாக சொல்லிக்கொண்டிருக்கும் கட்சி டயர் மேல நடவடிக்கை வேண்டாமென்று அரசங்கடத்திடம் சொல்லிவிட்டது .
அதன்பின் டயருக்கே மனம் உறுத்த பக்கவாதம் வலிப்பு வந்துவிட்டது .
ஒருமுறை காந்தியிடம் அவன் செய்த பாவங்களுக்காகத்தான் அப்படிப்பட்ட நிலை அவனுக்கு வந்ததா- கீதை சொல்லியபடி ? என்று நிருபர் ஒருவர் கேட்க,
மகா மஹா ஆத்மா என்ன சொன்னார் தெரியுமா?
” நான் அபப்டி நினைக்க வில்லை .எனக்குக்கூட கொஜ்சம் வலிப்பு வாதம் இருக்கிறது .
நான் பிரிட்டிஷ் சாருக்கு எதிராக போராடியதால்தான் அப்படி வந்தது என்று பிரிட்டிஷ் சார் சொல்லமுடியும் அல்லவா?
நான் டயரை மன்னித்துவிட்டேன் . அவர் இதய சுத்தியோடு இருந்தால் போதும் .இந்தியர்களும் டயரை மன்னித்துவிட்டார்கள் . ஆனால் மறக்க மாட்டார்கள்
நான் கெட்ட வார்த்தைகள் முகநூலில் எழுதுவதில்லை .
அதனால் தொடர்ந்து இன்னும் மூன்று நாலு பக்கம் எழுதும்படி காந்தி செய்தவைகளையும் சொன்ன வை களையும் எழுதவில்லை ..
===============================================
பி கு டயரை ((பஞ்சாப கவர்னராக இருந்தவர்.படையை நடத்தியது இன்னொரு டயர் ) உத்தம் சிங் என்ற இந்தியன் 1940 லண்டனுக்கே சென்று சுட்டு கொன்றான் .கைது செய்து தூக்கிலட ப்படும் முன் அவன் சொன்னான் :
” என் தாய் நாட்டுக்காக என் உயிரைக்கொடுப்பதைவிட பெரிய பெருமை எனக்கு என்ன இருக்கிறது ?”
உண்மையான தேசப்பிதா