Saturday, August 13, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home கொரோனா -CoronaVirus

இவர்களும் இனி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

Oredesam by Oredesam
June 9, 2021
in கொரோனா -CoronaVirus
0
இவர்களும் இனி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
FacebookTwitterWhatsappTelegram

கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. தற்சமயம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியாது.  மற்றவர்கள் போட்டுக் கொள்ளலாம். அதிலும் பாலூட்டும் தாய்மார்கள்கூட இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.  கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. பெரும்பான்மையோர் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமே மூன்றாம் அலையின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று தமிழ் நாடு அரசின் முன்னாள் பொதுசுகாதார இயக்குனரும் கோவிட்-19 மாநில பணிக்குழு உறுப்பினருமான டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.

மத்திய அரசின் புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம், ஆயுஷ் அமைச்சகத்தின்கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியன இணைந்து இன்று (9.6.2021) நடத்திய ”கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை: முன் தடுப்பு, தடுப்பூசி, சிகிச்சை மற்றும் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு அறிவுரைகள் “ என்ற காணொலி கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றியபோது டாக்டர் குழந்தைசாமி இவ்வாறு தெரிவித்தார்.

READ ALSO

அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முதலிடம்…ஸ்டிக்கர் ஒட்டிய விடியல் குரூப்! இதெல்லாம் பெருமையா முதல்வரே?

கோவாக்சினுக்கு 6 மாதம் கழித்து WHO அனுமதி! தாமதத்திற்கு காரணம் இவர்கள் தான்! உண்மையை போட்டுடைத்த பாரத் பயோடெக் கிருஷ்ணா எல்லா!

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மிதமான பாதிப்பு நிலை வரை இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர் கண்காணிப்பில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். தொற்று ஏற்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவைக் கண்காணிக்க வேண்டும். அளவு 94க்குக் குறைந்தால் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்.  ஆக்சிஜன் அளவைக் கவனிக்காமல் விட்டுவிட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்குப் போவது நிலைமையை மோசமாக்கி விடும். இன்னும் சில மாதங்களுக்கு விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை அனைவரும் தவிர்க்க வேண்டும். என்று டாக்டர் குழந்தைசாமி மேலும் கேட்டுக்கொண்டார்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட அலுவலர் டாக்டர் த.பழனி அறிமுகவுரை ஆற்றினார். அங்கன்வாடிப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதோடு தம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் தடுப்பூசி போட வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் திரு. ஜெ.காமராஜ் தலைமையுரை ஆற்றினார். சமூக ஊடகங்களில் இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்கள் தவறான கருத்துகளையும் வதந்திகளையும் நம்பி விடுகின்றனர். இளைஞர்கள் அறிவியலை நம்ப வேண்டும். தடுப்பூசி மீது அவநம்பிக்கை கொள்ளாமல் தாமாகவே முன்வந்து போட்டுக்கொள்ள வேண்டும் என்று காமராஜ் மேலும் கேட்டுக் கொண்டார்.

மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சி அலுவலரும் தலைமை அதிகாரியுமான டாக்டர் ஆ.இராஜேந்திரகுமார் கருத்துரை ஆற்றினார். கொரோனா தொற்று ஏற்பட்டால் முதல் 14 நாட்கள் கவனமுடன் இருக்கவேண்டும். சிகிச்சை, ஓய்வு, தூக்கம் ஆகியன இந்த நாட்களில் முக்கியமானவை. இதற்குப் பிறகு 7 நாட்கள் உடல் நிலையில் வேறு பாதிப்பு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த 21 நாட்களுக்குப் பிறகுதான் தொற்றாளர் பாதுகாப்பான நிலைக்கு வந்துள்ளார் எனச் சொல்ல முடியும். கொரோனா தொற்றுக்குப் பிறகான காலகட்டத்தில் (Post COVID period) சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சில மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.  குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவர் மீது கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்று டாக்டர் இராஜேந்திரகுமார் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் திரு. தி.சிவக்குமார் கடந்த 10 நாட்களில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் சுமார் 5691 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் சுமார் 107 மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் தெரிவித்தார்.  கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

ShareTweetSendShare

Related Posts

அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முதலிடம்…ஸ்டிக்கர் ஒட்டிய விடியல் குரூப்!  இதெல்லாம் பெருமையா முதல்வரே?
கொரோனா -CoronaVirus

அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் முதலிடம்…ஸ்டிக்கர் ஒட்டிய விடியல் குரூப்! இதெல்லாம் பெருமையா முதல்வரே?

November 29, 2021
கோவாக்சினுக்கு 6 மாதம் கழித்து WHO அனுமதி! தாமதத்திற்கு காரணம் இவர்கள் தான்! உண்மையை போட்டுடைத்த  பாரத் பயோடெக் கிருஷ்ணா எல்லா!
இந்தியா

கோவாக்சினுக்கு 6 மாதம் கழித்து WHO அனுமதி! தாமதத்திற்கு காரணம் இவர்கள் தான்! உண்மையை போட்டுடைத்த பாரத் பயோடெக் கிருஷ்ணா எல்லா!

November 14, 2021
இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை.
கொரோனா -CoronaVirus

மோடி அரசின் இலவச தடுப்பூசி ! தமிழகத்தில் ஒரே நாளில் 22.52 லட்சம் பேர் இலவச தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள் !

October 11, 2021
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்தியா

ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மாபெரும் மோடி சாதனை.

August 28, 2021
oredesam Vanathi Srinivasan
இந்தியா

பா.ஜ.க சார்பில் 4 லட்சம் பேர் கொண்ட ‘சுகாதார தன்னார்வலர்கள் படை’ – வானதி சீனிவாசன் MLA

August 9, 2021
டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து நடக்குமா?
உலகம்

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து நடக்குமா?

July 29, 2021

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

எல்லைப்பகுதி லடாக்கில் இருந்து இந்திய வீரர்களை முழுமையாக திரும்ப பெறமுடியாது: சீனாவிற்கு  பதிலடி!

எல்லைப்பகுதி லடாக்கில் இருந்து இந்திய வீரர்களை முழுமையாக திரும்ப பெறமுடியாது: சீனாவிற்கு பதிலடி!

July 31, 2020
மகாராஷ்டிரா அரசில் மீண்டும் முட்டல் மோதல் கடுப்பில் சரத்பவார்

மகாராஷ்டிரா அரசில் மீண்டும் முட்டல் மோதல் கடுப்பில் சரத்பவார்

February 15, 2020
எங்கள் கிராமத்தில் தேவாலயம் வரக்கூடாது  ஊர்மக்கள் திரண்டு தேவாலய பணியை தடுத்த தரமான சம்பவம்!

ஆளுங்கட்சியின் அத்துமீறல் இந்துகோவில் நிலத்தில் கிருஸ்த்துவ தேவாலயம் தடுத்து நிறுத்தியது இந்துமுன்னணி!

October 3, 2021
சம்பந்தம் இல்லாமல் ஈரோடு ஏன் முடக்கப்பட்டது…

கோபமடைந்த அமைச்சர் விஜயபாஸ்கர் விதிகளை மீறினால் கைது தான் !

March 23, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • ‘இலவச வேட்டி, சேலை திட்டத்தை கைவிட,திமுக அரசு திட்டம் அண்ணாமலை குற்றச்சாட்டு.
  • கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த விவசாயியும் பட்டினியால் இறக்கவில்லை: அண்ணாமலை..
  • பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !
  • தேசநலனுக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்த-பாஜக தலைவர் அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x