உலகை உலுக்கி வரும் கொரோனா சீனாவின் இறைச்சி மார்க்கெட் பகுதியில் இருந்து பரவியது என சீனா கூறிவருகிறது ஆனால் இறைச்சி சந்தையிலிருந்து பரவவில்லை என்றும் அது ஒரு இடத்தில கசிந்துள்ளது எனவும் அமெரிக்க அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் தான் சீனாவின் முக்கியமான வைரலாஜி ஆய்வகம் உள்ளது. அந்த ஆய்வகத்தின் மூலமாகத்தான் பரவியது என செய்திகளும் வந்தது. தற்போது வரை இன்னும் எவ்வாறு பரவியது என்பது தெளிவான புரிதல் இல்லாமல் இருக்கிறது. இது குறித்து அமெரிக்காவின் அறிவியலாளர் ஸ்டீவன் மாஷர், கொரோனா பரவியதாக கூறப்படும் சந்தைக்கும் வைரஸ் ஆராய்ச்சி மையத்துக்கும் 10 மைல் தொலைவுதான் இருக்கிறது என்பதை முன்பே கூறி இருந்தார் .
அதுமட்டுமில்லாமல் வைரஸ் பரவ காரணம் கவனக்குறைவால் இல்லாமலும் இருக்கலாம் வேண்டுமென்றே வைரஸ் பரப்பப்பட்டது என்ற தியரிகளும் உண்டு. ஆனால், சீன மருத்துவ சங்கத் தலைவராக இருந்தவரும் நுரையீரல் நிபுணருமான ஜோங் நான்ஷன், “கோவிட்-19 முதலில் சீனாவில் கண்டறியப்பட்டாலும், அதன் பிறப்பிடம் சீனாதான் எனச் சொல்ல முடியாது” என்றார்.
இதன் மூலம் வெளியிலிருந்து அது உள்ளே கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்பதை அவர் சூசகமாகச் சுட்டிக்காட்டினார்.அமெரிக்காவும் சீனாவும் இந்த விஷயத்தில் மாற்றி மாற்றி குற்றம் சுமத்தி வருகின்றனர். இதுகுறித்த விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சீனா இந்த விஷயத்தில் உண்மையா மறைப்பதாகவும், நடந்ததை ஏற்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.