Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பிரதமரின் கரீப் கல்யாண்த்திட்டத்தின் கீழ் 27 நாட்களில் 33.14 கோடி மக்களுக்கு 31,235 கோடி நேரடியாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

Oredesam by Oredesam
April 23, 2020
in இந்தியா, செய்திகள்
0
பிரதமரின் கரீப் கல்யாண்த்திட்டத்தின் கீழ்  27 நாட்களில் 33.14 கோடி மக்களுக்கு  31,235 கோடி நேரடியாக நிதி வழங்கப்பட்டுள்ளது.
FacebookTwitterWhatsappTelegram

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2020 மார்ச் 26ஆம் தேதி அறிவித்தபடி பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் இதுவரையில் (2020 ஏப்ரல் 22 வரையில்) ஏழை மக்கள் 33கோடிக்கும் அதிகமானோருக்கு ரூ.31,235 கோடி நிதியுதவி, டிஜிட்டல் பணப்பட்டுவாடா கட்டமைப்பு மூலம் வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19இன் தொடர்ச்சியாக முடக்கநிலை அமல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்தார்.

பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் பெண்கள், ஏழைகள், மூத்த குடிமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ரொக்கமாகப் பணம் வழங்குதல், இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டங்களை அரசு அறிவித்தது. இந்தத் தொகுப்பு நிவாரணத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படுவதை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிக்கின்றன. உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு, நிவாரண உதவிகள் சென்று சேருவதை உறுதிசெய்வதற்கு, நிதியமைச்சகமும், தொடர்புடைய அமைச்சகங்களும், அமைச்சரவைச் செயலகமும், பிரதமர் அலுவலகமும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 22 ஆம் தேதி வரையில் பயனாளிகளுக்கு பின்வரும் நிதி உதவிகள் (ரொக்கமாக) வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டம்

22/04/2020 வரையில் மொத்த நேரடி பரிமாற்றம்

பிரதமரின் ஜன்தன் யோஜ்னா திட்டத்தில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கான உதவி பயனாளிகளின் எண்ணிக்கை 20.05 கோடி (98%) வழங்கப்பட்ட தொகை 10,025 கோடி

(வயதான விதவையர், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான) தேசிய சமூக உதவித் திட்டம் NSAP மூலம் உதவி பயனாளிகள் எண்ணிக்கை 2.82 கோடி (100%) வழங்கப்பட்ட தொகை 1405 கோடி

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான உதவித் தொகை முன்கூட்டியே வழங்கியது பயனாளிகள் எண்ணிக்கை 8 கோடி (8 கோடியில்) வழங்கப்பட்ட தொகை 16,146 கோடி

கட்டடங்கள், பிற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உதவி பயனாளிகள் எண்ணிக்கை 2.17 கோடி வழங்கப்பட்டுள்ள தொகை 3497 கோடி

ஊழியர் வருங்கால வைப்பு நிதி EPFO-வுக்கு 24% பங்களிப்பு பயனாளிகள் 0.10 கோடி வழங்கப்பட்ட தொகை 162 கோடி

மொத்தம் 33.14 கோடி மக்களுக்கு 31,235 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது

பயனாளிகளுக்கு விரைவாக, நல்ல முறையில் பணம் செலுத்துவதற்காக Fintech மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. நேரடியாக பயனாளி கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தில் (DBT), பயனாளிகளின் கணக்கிற்கே பணம் செலுத்தப்படுவதால், தவறானவர்களின் கைகளுக்குப் பணம் போய்விடாமல் தடுக்கப்பட்டு, திட்டத்தின் செயல் திறன் அதிகரிக்கப் படுகிறது. பயனாளி, வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், நேரடியாக அவருடைய கணக்கில் பணம் செலுத்துவது உறுதி செய்யப்படுகிறது.

பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டம்:-

ஏப்ரல் மாதத்துக்கான ஒதுக்கீடு 40 லட்சம் மெட்ரிக் டன்கள் என்ற நிலையில், இதுவரையில் 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் 40.03 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்கள் பெறப்பட்டுள்ளது. 31 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 1.19 கோடி ரேஷன் அட்டை வைத்திருக்கும், 39.27 கோடி பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்கான பொருள்களாக 19.63 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 1,09,227 மெட்ரிக் டன் அளவுக்கு பயறு வகைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் உஜ்வாலா யோஜ்னா திட்டத்தில் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள்:-
பிரதமரின் உஜ்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் மொத்தம் 3.05 கோடி சிலிண்டர்களுக்குப் பதிவு செய்யப்பட்டு, 2.66 கோடி இலவச சிலிண்டர்கள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிலுவையில் 75% அல்லது 3 மாத சம்பளம், இவற்றில் எது குறைவோ அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத முன்பணமாகப் பெறும் வசதி:-
இதுவரையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் 6.06 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் ரூ.1954 கோடி எடுத்துள்ளனர்.

3 மாதங்களுக்கு ஈ.பி.எப். பங்களிப்பு: 100 பேருக்கும் குறைவான தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக மாதச் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தில் 24 சதவீதத்துக்கான தொழிலாளர் ஈட்டுறுதி சந்தா பங்களிப்பு 3 மாதங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் 2020 ஏப்ரல் மாதத்துக்கான பங்களிப்பாக அரசு ஏற்கெனவே ரூ.1000 கோடி அளித்துள்ளது. இதன் மூலம் 78.74 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். இதற்கான அறிவிப்பு, அடிக்கடி எழும் கேள்விகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

இதுவரையில் 10.6 லட்சம் தொழிலாளர்கள் ரூ.162.11 கோடி அளவுக்குப் பயன் பெற்றுள்ளனர். 68,775 நிறுவனங்களுக்கு இந்தத் தொகை அளிக்கப் பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் (MNREGA):-
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 01.04.2020 தேதியில் இருந்து ஊதியம் அதிகரிப்பு குறித்து அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 1.27 கோடி மனித உழைப்பு நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் பொருட்கள் நிலுவையை அளிக்கும் வகையில் ரூ.7300 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் பணிபுரியும் சுகாதார அலுவலர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் :-
22.12 லட்சம் சுகாதார அலுவலர்கள் பயன்பெறும் வகையிலான இந்தத் திட்டத்தை நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் அமல்படுத்துகிறது.

vii. விவசாயிகளுக்கான உதவி :-
மொத்தமாக வழங்கப்பட்ட நிதியில் ரூ.16,146 கோடி பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் முதலாவது தவணைக்காக அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 8 கோடி பேருக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் தலா ரூ2000 செலுத்தப் பட்டுள்ளது.

பிரதமரின் ஜன் தன் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு நிதியுதவி:-
இந்தியாவில் பெரும்பாலான வீடுகளை பெண்கள் தான் நிர்வகித்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் 20.05 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்குகளில் தலா ரூ.500 செலுத்தப் பட்டுள்ளது. 22 ஏப்ரல் 2020 தேதியின்படி இந்தத் தலைப்பில் மொத்தம் ரூ.10,025 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முதியோர், விதவையர், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி:-
தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் 2.82 கோடி முதியோர், விதவையர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,405 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயனாளிக்கும் முதலாவது தவணையாக ரூ.500 வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் மற்றொரு தவணையாக தலா ரூ.500 வழங்கப்படும்.

கட்டடம், இதர கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவி:-
கட்டடம், இதர கட்டுமானத் தொழிலாளர்கள் 2.17 கோடி பேருக்கு, கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நிதியில் இருந்து உதவித் தொகை அளிக்கப் பட்டுள்ளது. இத் திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.3,497 கோடி அளிக்கப் பட்டுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பாஜக பலம் அறிந்த பாமக ! பாமக நிறுவனருக்கு பாடம் எடுத்த பாஜக இளைஞரணி தலைவர் ரமேஷ்ஷிவா.

பாஜக பலம் அறிந்த பாமக ! பாமக நிறுவனருக்கு பாடம் எடுத்த பாஜக இளைஞரணி தலைவர் ரமேஷ்ஷிவா.

June 2, 2022
சீனாவும் உலகசுகாதார அமைப்பும் கூட்டாளிகள்! ஜெர்மனி பத்திரிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

சீனாவும் உலகசுகாதார அமைப்பும் கூட்டாளிகள்! ஜெர்மனி பத்திரிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

May 11, 2020

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை அளேக்காக தூக்கும் மோடி.

April 18, 2020
jayakumar congress

ராமஜெயம் வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாறுமா? மர்ம மரணத்தில் எழும் பல கேள்விகள்?

May 9, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x