தமிழகத்தில் மட்டும் சுமார், 5,300 கி.மீ.க்கு அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் 46 இடங்களில், சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.
இது தவிர மாநில அரசின் கீழ் மாநில நெடுஞ்சாலைத் துறை செயல்படுகிறது. இதன் கீழ் இயங்கும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால், சென்னை, ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலை,ecr பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவை அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.
புதுவை நோக்கி செல்லும் வாகனங்கள், 90 சதவீதம் மாநில அரசால் பராமரிக்கப்படும் இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம், பெருங்குடி, ஒக்கியம் துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், உத்தண்டி உள்ளிட்ட, ஐநது இடங்களில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால், சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சாலை மேம்படுத்துதல் சீர்செய்தல் போன்ற பணிகளுக்கு சுங்க நிதியை மாநில நெடுஞ்சாலைத் துறை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இது சில இடங்கள் தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட்டு வருகிறது.
இந்நிலையில், தென்சென்னை, தி.மு.க., – எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், நேற்று முன்தினம், டில்லியில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து சில கோரிக்கை மனுக்களை அளித்தார். அந்த மனுவில் தெளிவாக. சென்னை மாநகராட்சி எல்லைக்குள்,இந்த ஐந்து சுங்கச்சாவடிகளும் வருகின்றன.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு, 30 நிமிடங்களுக்கு மேல், வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இதனால், சாலையை எளிதாக கடக்கும் பயணியரின் நோக்கம் வீணடிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்த மனு டெல்லியிலிருந்து நேரடியாக தமிழக நெடுஞசாலை அதிகாரிகளுக்கு வந்துள்ளது. திமுக எம்.பி. தமிழச்சியின் இந்த மனுவை பார்த்து கிண்டலடித்த அதிகாரிகள் சிரித்துள்ளனர். இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தென்சென்னை எம்.பி., கோரிக்கை வைத்துள்ள சுங்கச்சாவடிகள், மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றால், தமிழக அரசிடமும், துறையின் அமைச்சர் என்ற முறையில், முதல்வர் இ.பி.எஸ்.,சிடமும் தான் முறையிட வேண்டும்.தென் சென்னை எம்.பி தமிழச்சிதங்கபாண்டியன் , அதிகம் படித்தவர். எந்த சாலை, யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றுகூட தெரியாமல், மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளது, வேடிக்கையாக உள்ளது. இந்த கட்டண சாலைகள் அனைத்தும், தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்டவை என்பதை, அவர் உணர வேண்டும். எதோ ஒரு காரணத்தை வைத்து மத்திய அமைச்சரை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு மனுவை தயாரித்து சென்றுள்ளார் தத்தி எம்.பி
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















