முதலில் சீன மருத்துவகுழு வடகொரியா விரைந்துள்ளது, இது வடகொரிய அதிபருக்கு ஏதோ நிகழ்ந்துவிட்டதை உறுதிபடுத்துகின்றது
வடகொரியா இப்பொழுது கிம்ம்மின் தங்கையால் ஆளபடுகின்றது என்கின்றார்கள், இப்பொழுது சீன மருத்துவ குழுவினை வரவைத்திருப்பதும் அதுவே, விரைவில் செய்திகள் ஏதும் வரலாம்.
வடகொரிய குண்டனை விட அவரின் சகோதரி ஒல்லிகுச்சி மகா ஆபத்து, அம்மணி ஒரு மாதிரியான அடாவடி ரகம்.
வடகொரிய அரச பீடத்தில் ஏதோ நடந்து கொண்டிருப்பது மட்டும் உண்மை.
இன்னொரு விவகாரம் சீனாவின் டிஜிட்டல் கரன்ஸி, அந்நாடு காகித கரன்சிகள் மூலம் கொரொனா பரவும் என அஞ்சுகின்றது இதனால் டிஜிட்டல் கரன்சிக்கு மாறிவிட்டோம் என்கின்றது.
ஆனால் அமெரிக்காவோ இது டாலரில் பரிவர்த்தனையினை தடுக்கும் முயற்சி கொரோனாவால் அறிவிக்கபடா போரை தொடங்கிய சீனா அடுத்த யுத்தமாக டிஜிட்டல் கரன்ஸியினை அறிமுகபடுத்துகின்றது என்கின்றது.
அமெரிக்க சீன மோதல்கள் வலுத்து ஒரு மாதிரி செல்கின்றன.
வடகொரிய அதிபர் விழுந்தவுடன் அவரின் ராக்கெட் விளையாட்டை இன்னொரு நாடு தொடங்காவிட்டால் என்ன உலகம் இது, கொரோனா எனும் நெருக்கடியான நேரத்திலும் ராக்கெட் விளையாட்டை ஒரு நாடு தத்தெடுத்துவிட்டது அதன் பெயர் பாகிஸ்தான்.
“இருக்குற இம்சையில இவனுக வேற, 13 ஆயிரம் கொரோனா நோயாளிகளை வச்சிகிட்டு இதென்ன விளையாட்டு?”
என உலகம் கேட்க “எந்த சூழலிலும் போருக்கு தயார் என்பது இதுதான் பாஸ்” என சிரிக்காமல் சொல்கின்றது பாகிஸ்தான்.
கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.