உயர்திரு. க. பணீந்திரரெட்டி அவர்கள்,
முதன்மை செயலர் / ஆணையர்
இந்து சமய அறநிலையத் துறை,
சென்னை 34.
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
வணக்கம்.
கொரானா தொற்று ஏற்படாமலும், பரவாமலும் இருக்க திருக்கோயில்களில் சுத்தம், சுகாதாரம் பேணுவது குறித்த தங்களின் சுற்றறிக்கை அறிந்து மகிழ்ந்தோம்.
தங்களின் சீரிய வழிகாட்டுதல்கள் கண்டு, இந்து முன்னணி தங்களை மனதார பாராட்டுகிறது.
நமது திருக்கோயில்கள் சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் நோய் தொற்று ஏற்பாடாத வண்ணமும் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதனைக் கருத்தில் கொண்டு தாங்கள் அளித்துள்ள சுற்றறிக்கை குறிப்புகள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.
அதே சமயம் பணியாளர்கள் நலனிலும், அவர்கள் பாதுகாப்பிலும் தாங்கள் காட்டியுள்ள அக்கறை மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த நோய் தொற்றிலிருந்து, உலகமும், நமது நாடும், தமிழகமும் மீண்டு, நல்ல நிலைக்குத் திரும்பி அனைவரும் நலமுடன் வாழ்ந்திட இறைவன் திருவருள் புரிவாராக.
நன்றி.
என்றும் தேசியப் பணியில்,
(காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்)
மாநிலத் தலைவர்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















