உயிர்காக்கும் உதான் திட்டத்தின் கீழ், 490 விமானங்களை ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை மற்றும் தனியார் நிறுவனங்கள் இயக்கியுள்ளன. இதில், 289 விமானங்கள் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர் நிறுவனங்களால் இயக்கப்பட்டன.
இதுவரை, சுமார் 842.42 டன் சரக்குகளை இந்த விமானங்கள் ஏற்றிச் சென்றுள்ளன. இதுவரை 4,73,609 கி.மீ. தூரத்தை உயிர்காக்கும் உதான் விமானங்கள் கடந்துள்ளன. கொவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க ‘உயிர்காக்கும் உதான்’ விமானங்கள், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் தொலைதூரப் பகுதிகளுக்கும் அத்தியாவசியமான மருத்துவப் பொருள்களை கொண்டு செல்வதற்காக இயக்கப்படுகின்றன.
சர்வதேசப் பிரிவில், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், கொவிட்-19 நிவாரணப் பொருள்களை ஏற்றுவதற்காக ,கிழக்கு ஆசியாவுடன் சரக்கு விமானப்போக்குவரத்து தொடர்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா 1075 டன் மருத்துவப் பொருள்களைக் கொண்டுவந்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















