இனி உலகளாவிய வர்த்தகத்தில் சீனாவின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது. மூலப்பொருட்களை ஜப்பான் தென்கொரியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மன் போன்ற நாடுகளிடம் இருந்து தொழில் நுட்பத்தை பெற்று தன்னுடைய மனித வளத்தை வைத்து பல்வேறு பொருட்களை உருவா க்கி உலகின் பெரிய நிறுவங்களின் பெ யரில் உலகசந்தையில் விற்பனை செய்து வந்தது.
அதாவது தென்கொரியா அல்லது ஜப்பான் நாட்டில் இருந்து எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கி அமெரிக்கா ஜெர்மன் பிரான்ஸ் இங்கிலாந்து ஜப்பான் தென் கொரியா போன்ற நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் பெயரில் தயாரித்து விற்பனை செய்து வந்தது.உலகின் சப்ளை செயினாக இது வரை இருந்த அமெரிக்கா சீனாவுடன் வர்த்தக போரை ஆரம்பித்தவுடன் கலகலக்க ஆரம்பித்தது.ஏனென்றால் சீனாவின் நம்பர் 1 இறக்குமதியாளர் அமெரிக்கா தான்.
அடுத்து கொரானா சீனாவில் உருவாகி உலகை உலுக்க ஆரம்பித்த பிறகு ஐரோப்பிய நாடுகளும் சீனாவுக்கு எதிராக திரு ம்பி சீனாவுடன் உள்ள வர்த்தக உறவை துண்டிக்க விரும்புகின்றன. ஐரோப்பிய நாடுகள் தான் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதி ல் அமெரிக்காவுக்கு அடுத்து இருக்கிறார்கள்.ஆக சீனா தன்னுடைய முதல் இரண்டு இறக்குமதியாளர்களை இழந்து விட்டது.
அடுத்து ஜப்பான் தென்கொரியா நாடுகள் தங்களுடைய நிறுவனங்களை சீனாவில் இருந்து விலக்கி கொள்வதன் மூல மாக சீனா தொழில் நுட்பம் சார்ந்த இர ண்டு முக்கிய நாடுகளில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை இறக்குமதி செய்வதும் நின்று விடுகிறது
கம்யூனிச நாடான சீனா 40 வருடங்களுக்குள் அடைந்த வளர்ச்சி மாதிரி் உலகின் எந்த நாடும் வளர்ச்சி அடைந்து இருக்கவில்லை. அமெரிக்கா உலகின் நம்பர் 1 நாடாக வளர்ச்சி அடைய ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டது என்றால் சீனாவுக்கு 40 ஆண்டுகளே போதுமாக இருந்தது.
இதற்கு முக்கிய காரணம் உலகமயமா க்கல் மற்றும் சந்தை பொருளாதாரம் தான். 1980 களில் இந்தியாவும் சீனாவும் பொருளாதாரத்தில் சமமாக இருந்த பொழுது சீனா மட்டும் எப்படி இந்த அளவிற்கு முன்னேறியது என்றால் சித்தாதங்கள் வாய் பேச்சுக்கு நன்றாக இருக்குமே தவிர வயிற்றுப்பசிக்கு சோறு போடாது என்று தெளிவாக தெரிந்து கொண்டு அந்த பாதையில் சென்றார்கள்.
இந்த உலகின் மிகப்பெரிய பஞ்சம் எதுவென்றால் 1959-1962 வரை சீனாவில் நிகழ்ந்த பெரும் பஞ்சம் தான். சுமார் 5 கோடி மக்களை பலி கொண்ட இந்த பஞ்சத்திற்கு முக்கிய காரணம் மாவோ தலை மையில் சீனா கடைபிடித்த பொதுவுடைமை கொள்கை தான் காரணமாகும்.
இந்திய அரசியலுக்கு சம்பந்தமே இல்லாத கம்யூனிஸ்டுகளின் பிடிகளில் சிக்கி இந்தியா சோசலிச பாதையில் சென்ற பொழுது கம்யூனிச நாடு என்றுகூறிக்கொண்டு முதலாளித்துவ பாதையில் சீனாவை அழைத்து சென்ற முன்னாள் சீன அதிபர் டெங் ஜியோபிங்கைதான் மாவோவிற்கு பதிலாக சீனாவின் தந்தை என்று கூற வேண்டும்.
1980 களில் டெங் ஜியோ பிங் உருவா க்கிய சந்தை பொருளாதார கொள்கை தான்இன்று சீனாவை உலகின் நம்பர் 2 பொருளாதார நாடாக கொண்டு வந்து நிறுத்தியதே தவிர கம்யூனிச சித்தாந்தம் அல்ல.
சித்தாந்தத்தை ஓரம் கட்டிவிட்டு அமெரிக்கா மற்றும் முதலாளித்துவ நாடுகளிடம் கை கட்டி நின்று தன்னுடைய நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல பன்னாட்டு நிறுவனங்களை சீனாவுக்கு டெங் ஜியோ பிங் அழைக்காமல் இருந்து இருந்தால் இன்று சீனாவும் வட கொரியா மாதிரி வாயாலே வடை சுட்டுக் கொண்டு சோற்றுக்கு பிச்சை எடுத்துக் கொண்டு தான் இருக்க வேண்டும்.
டெங் ஜியோ பிங்கை அடுத்து அதிபராக வந்த ஜியாங் ஜெமின் அடுத்து அதிபராக வந்த ஹூ ஜிண்டோவோ என்று சுமார் 30 ஆண்டுகளாக தொடர்ந்து சந்தை பொருளாதார த்தை பயன்படுத்தி உலகமயமாக்கல் மூலமாக உலகப் பொருளாதாரத்தை தன்னுடைய பிடிக்குள் கொண்டு வந்த சீனா உலகின் 2 வது பொருளாதார வல்லரசாக உயர்ந்தது.
கம்யூனிஸ்ட் நாடான சீனா இந்த அளவிற்கு வளர்ந்து நிற்க முக்கிய காரணமே முதலாள த்துவ நாடுகளோடு இணங்கி நின்றதால் தான் சாத்தியமானதே தவிர கம்யூனிச நாடுகள் கை கொடுத்ததால் அல்ல.
சீன அதிபராக ஜி ஜின்பிங் வந்த பிறகு இனி சீனா தான் உலகின் வல்லரசு சீனாதான் என்று சீனா பிரச்சாரம் செய்ய ஆர ம்பிக்கவும் உலகின் வல்லரசாக உள்ள அமெரிக்காவுக்கு கோபம் வர ஆரம்பித்தது.
பின்னே இருக்காதா? பஞ்சம் பிழைக்க பாதை மாறி வந்த ஒருவனுக்கு சோறு போட்டு தொழில் வைத்துக் கொடுத்து வாழ்வு கொடுத்தால் வசதி வாய்ப்பு வந்த உடனே நான் உன்னை விட பெரியவன் என்று மார்தட்டி நின்றால் சோறு போட்டு வாழ வைத்தவனுக்கு கோபம் வருமா? வராதா?
இந்த கோபம் தான் அமெரிக்காவுக்கு வந்தது.இருந்தாலும் பிறவி பணக்காரனை விட பசிக்கு வேலைக்கு வந்தவனிடம் தான் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி அதிகமாக இருக்கும் என்பது போல சீனாவின் முன்னேற வேண்டும் என்கிற வெறியினால் சீனாவின் பொருட்கள் உலகமெங்கும் பரவி கிடக்க மாறாக முதலாளித்துவ நாடுகள் உற்பத்தியை மறந்து சீனாவின் பொருட்களை விற்ப னை செய்யும் ஏஜென்ட் களாக மாறி விட்டன.
இதனால் ஆயிரம் தான் சீனா மீது கோ பம் இருந்தாலும் வேறு வழியின்றி சீனாவுடன் அமெரிக்கா இணைந்தே வர்த்தக பாதையில் நடந்து வந்தது. ஆனால் காலம் ஒன்று இருக்கிறது அல்லவா? அது அனைத்தையும் மாற்றும் என்பதற்கு சீ னாவின் இப்போதைய நிலையே உதாரணமாக கூறலாம்.
இந்திய பிரதமராக மோடி வந்த பிறகு உலக நாடுகளை சுற்றத் தொடங்கினார் எதற்கு தெரியுமா? சீனா மாதிரியே எங்களிடமும் மனித ஆற்றல் கொட்டி கிடக்கிறது எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று நிற்க சீனாவின் மீதுள்ள கோபத்தில் இந்தியாவை திரும்பி பார்க்க ஆரம்பித்தன உலக நாடுகள்.
இருந்தாலும் 30 வருட தொழில் பார்ட்னரான சீனாவை உதறித்தள்ள முடியாமல் இந்தியாவின் கோரிக்கையை பரிசீலிப்போம் என்றே கூறி வந்தன. இந்த நிலையில் அமெரிக்கா அதிபராக ட்ரம்ப் வந்த பிறகு தான் இந்தியாவுக்கு வசந்த காலம் ஆரம்பித்தது. சீனா மீது அமெரிக்கா வுக்கு இருந்த கோபத்தை மோடி ட்ரம்புக்கு ஊதி விட ட்ரம்ப் சீனா மீது வர்த்தக போரை ஆரம்பித்தார்.
சீனா மீது அமெரிக்கா ஆரம்பித்த வர்த்தக போருக்கு பின்னால் மோடியின் தலையீடு நிச்சயமாக இருக்கிறது. ஏனெனில் அதே நேரத்தில் இந்தியா மீது கூட ட்ரம்ப் சில கட்டுப்பாடுகளை விதிப்பது மாதிரி நடித்தார்.
ட்ரம்ப்பின் வர்த்தக போரினால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்ட து.இதனால் சீனாவில் இருந்து அமெரிக்கா விற்கு இறக்குமதி யான பொருட்களின் விலை உயர ஆரம்பித்தது. இதனால் அமெ ரிக்கர்கள் சீனா பொருட்களை தவிர்க்க ஆரம்பித்தனர்.
இந்த இடத்தில் ஒன்றை யோசிக்க வே ண்டும்.எந்த ஒரு நாடும் தன்னுடைய மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்க ளை அளித்து அவர்களுக்கு சேவை செய்ய விரும்புமே தவிர அவர்களுக்கு கிடைக்கும் பொருட்களுக்கு அதிக வரி விதி த்து லாபம் சம்பாதிக்க நினைக்காது.
அமெரிக்கா சீனா மீது திணித்த வர்த்தக போரின் முக்கிய நோக்கமே சீனாவின் இடத்திற்கு இந்தியாவை கொண்டு வரவேண்டும் என்பது தான். அமெரிக்கா விதித்த இறக்குமதி வரியினால் சீனாவின் பொருட்களுக்கு விலை அதிகமாகி விற்பனை குறைந்தது.
இதனால் சீனாவில் இருந்த பன்னாட்டு நிறுவனங்கள் நஷ்டத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தன. இதனால் அவர்கள் சீனா வை விட்டு வெளியேறும் மன நிலையை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில் கொரானாவும் வந்துவிட போதும்டா சாமி என்று சீனாவை விட்டு பன்னாட்டு நிறுவனங்கள் ஓட ஆரம்பித்து விட்டன.
இதனால் உலகம் முழுவதும் சீனாவின் சப்ளை செயின் அறுந்து விடுகிறது. அடுத்து உலகின் மிகப்பெரிய நுகர்வோர்கள் உடைய இந்தியா சீனாவை புறக்கணிக்க முடிவு செய்யும் பொழுது சீனாவின் பொ ருட்கள் வருவது தடைபட்டு உலகமயமாக்கலின் மெயின் செண்டராக இருக்கும் சீனா அதில் இருந்து விலக்கி வைக்கப்படும்.
அந்த இடத்தில் இந்தியா இருக்கும். இது தான் அமெரிக்காவின் விருப்பம். அதுவே கடவுளின் விருப்பமாக இருக்கிறது. அந்த விருப்பத்தை மோடி நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்.மோடி ஏன் உலகை சுற்றிக் கொண்டு இருக்கிறார் என்று சில தற்குறிகள் கேள்வி கேட்பார்கள்.
அவர்களுக்கு நான் உலகம் இந்தியாவை சுற்றும் வரை மோடி உலகை சுற்றிக் கொண்டு இருப்பார் என்று அடிக்கடி கூறுவது வழக்கம். இப்பொழுது தான் உலகம் பாதை மாறி இந்தியாவை சுற்ற ஆரம்பி த்து இருக்கிறது.
வலது சாரி சிந்தனையாளர் எழுத்தாளர் : விஜயகுமார்