புதிய குஜராத் முதல்வர் மன்சுக் மாண்டவியா ? விஜய் ரூபானி குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க நாளைகுஜராத்தில் பிஜேபி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது..அனேகமாக இப்பொழுது மத்திய சுகாதார துறை அமைச்சராக இருக்கும் மன்சுக்மாண்டவியா குஜராத் முதல்வராக பதவிஏற்க வாய்ப்புகள அதிகமாக தெரிகிறது.
மன்சுக் மாண்டவியா குஜராத்தில் உள்ளபெரும்பான்மை சுமுதாயமான பட்டேல்இனத்தை சார்ந்தவர் .இதோடு 48 வயதுகொண்ட இளைஞர் என்பதால் மன்சுக்மாண்டவியா குஜராத் முதல்வராக நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
மன்சுக் மாண்டவியா 2002 சட்டமன்ற தேர்தலில் பலிதானா சட்டமன்ற தொகு தியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொழுது குஜராத் மாநிலத்தில் குறைந்த வயதில் எம்எல்ஏ ஆனவர்என்கிற பெரு மையை பெற்றார்.மன்சுக் மாண்டவியா 2010 ல் குஜராத் அ க்ரோ இன்டஸ்ட்ரீஸ்கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மனாகும் பொழுதுமிக குறைந்த வயதில் அந்த பதவியை பெற்றவர் என்கிற பெருமையை பெற்றர்.
2015 ல் குஜராத் மாநில பிஜேபி பொதுசெயலாளராக பதவி ஏற்ற பொழுது குகாந்தி வயதில் அந்த பதவியை பெற்றவர் என்கிற பெருமையை பெற்றார்.2012 ல் இருந்து இப்பொழுது வரை ராஜ்யசபா எம்பி .இதைவிட முக்கியமானது மோடி அமைச்சரவையில் 2016 ல் இருந்து தொடர்ந்து அமைச்சராக இருந்து வருகிறார். 2016-2019 மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்கு வரத்து இணை அமை ச்சர் பொறுப்பு வகித்தவர்.
2019 ல் மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் தனிப்பொறுப்புடன் துறை முகம் நீர்வழி போக்குவரத்து மற்றும் உரம் இரசாயன துறை அமைச்சராக இருந்தார்.சமீபத்தில் ஜூலை மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தில் பெரிய தலைவர்கள் அமைச்சர் பதவிகளை இழந்து நிற்க மன்சுக் மாண்டவியா காபினேட் அமைச்சராக அதுவும் கொரானாகாலத்தில் மத்திய சுகாதார துறை அமைச்சராக்கப்பட்டார் என்றால் மோடி மன்சுக் மீது எவ்வளவு நம்பிக்கையை வைத்து இருக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம் மோடியின் நம்பிக்கையை காப்பாற்றிமன்சுக் மாண்டவியா கொரானாவை கட்டுப்படுத்தி தான் ஒரு சிறந்த சுகாதாரஅமைச்சர் என்று குறுகிய காலத்தில் நிரூபித்து இருக்கிறார்.குஜராத் முதல்வராக இதற்கு மேல் என்ன தகுதி வேண்டும்? எனவே மன்சுக் மாண்டவியா முதல்வராக தேர்ந்தெடுக்கப்படநிறைய வாய்ப்புகள் இருக்கிறது.
கட்டுரை வலதுசாரி எழுத்தாளர் விஜய்குமார் அருணகிரி.