இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல லட்சம் மக்கள் கொரோனா வைரஸிலிருந்து காப்பற்றபட்டுள்ளனர், உலக நாடுகள் கணிதத்தை மத்திய அரசு சுக்கு நூறாகியுள்ளத்து.
மே மாதம் இந்தியாவில் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சுகாதார அமைப்பு கூறியது 1 லட்சம் இறப்புகள் ஏற்படும் என கூறியது. ஆனால் இந்தியாவின் தடுப்பு நடவடிக்கையால் பாதிப்பு மிக குறைவு, இதற்கு உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி வருகிறது. ஆனால் இங்கு உள்ள எதிர்கட்சிகளோ அரசினை எப்படி திட்டுவது குறைகூறுவது என காரணத்தை தேடி வருகிறது. இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதி பிரதமரின் சார்பில் துவக்கப்பட்டது #PMCARES.என்ற பெயரில். இதற்கு வந்த நிதியினை முதற் கட்டமாக மோதி அரசு 3100 கோடியை ஒதுக்கியது.
இதனை தொடர்ந்து மக்களின் பணம் மக்கள் நன்மைக்காக செலவிடுவதல் வெளிப்படைதன்மையுடன் செயல்படுகிறது மோடி அரசு.அதற்கு சமீபத்திய உதாரணம் #PMCARES. ஒதுக்கீடு செய்துள்ள ₹3100 கோடியில்
- ₹2000 கோடிக்கு உள்நாட்டிலேயே தயாரான வெண்டிலேட்டர் வாங்கப்படவுள்ளன. இதுவரை நாடு முழுவதும் 47000 வெண்டிலேட்டர்களே உள்ளன. தற்போது 50,000 வெண்டிலேட்டர்கள் ஒரே ஒதுக்கீட்டில் வாங்கப்படுகின்றது.
- புலம் பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக அனைத்து மாநிலங்களுக்கும் ₹1000 கோடி
- கொரோனா விற்கான மருந்து தயாரிப்புக்காக ₹100 கோடி. ஒதுக்கப்பட்டது
இந்த நிலையில் இந்த நிதியிலிருந்து வாங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.மேலும் இந்த வென்டிலேட்டர்கள் அணைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கும் பணியினை மத்திய அரசு முடுக்கிவிட்டது.