தேசிய பேரிடர் காலங்களுக்கு உதவதற்காக பிரதமர் நிவாரண நிதி என்று அமைப்பு இருக்கும்போது பி.எம்.கேர் என்று புதிதாக ஏன் ஒரு அமைப்பை உருவாக்கி அதில் நிதி திரட்ட வேண்டும் என்று எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்தநிலையில், ப்ளூக்ரேஃப்ட் டிஜிட்டல் ஃபவுன்டேசன் என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ அகிலேஷ் மிஸ்ரா பிரதமர் நிவாரண நிதி அமைப்புக்கும், பி.எம்.கேருக்கு உள்ள வேறுபாடுகளை விளக்கியுள்ளார்.
இது தொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் தேசிய நிவாரண நிதி இருக்கும்போது எதற்காக தனியாக பி.எம்.கேர் அமைப்பு? பிரதமர் தேசிய நிவாரண நிதி என்பது குறிப்பாக பேரிடர் காலத்தின்போது தனிப்பட்ட ஒருவருக்கோ அல்லது குடும்பத்துக்கோ உதவுவதற்கான அமைப்பு. கொரோனா போன்ற அசாதரண சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் வாய்ப்பு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இல்லை. பிரதமர் நிவாரண நிதி(PMNRF)யிலிருந்து பிஎம்.கேர்(PMCARE) எப்படி வேறுபடுகிறது?
மருத்துவ வசதி, சுகாதாரம் மற்றும் பிற கட்டுமானத்தை மேம்படுத்துவதன் மூலம் அவசரகால பொதுச் சுகாதாரத்துக்கு உதவுவதுதான் பி.எம்.கேர். இந்த விவகாரங்கள் பிரதமர் நிவாரண நிதியில் இடம்பெறவில்லை.
பிரதமர் நிவாரண நிதி வாரிய உறுப்பினர்கள்: பிரதமர், காங்கிரஸ் தலைவர், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பி.எம்.கேர் வாரிய உறுப்பினர்கள்: பிரதமர், மத்திய நிதியமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர், ரயில்வே அமைச்சர்.
பிரதமர் நிவாரண நிதி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அந்த வாரியத்தில் எதற்காக காங்கிரஸ் தலைவர் உள்ளார்?
வைத்தியநாத ஐய்யர், தாகுர் ஆகியோர் தான் பிரதமர் நிவாரண நிதி அமைப்பின் ஆடிட்டர்களாக இருந்தனர். அவர்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது என்ன பிரதமர் நிவாரண நிதி அமைப்பு உருவாக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.இந்த வாரியத்தில் எப்போது காங்கிரஸ் தலைவர் உறுப்பினராக இருப்பார். தற்போது சோனியா காந்தி இருக்கிறார்.ஆடிட்டராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் இருப்பார்.
இந்த அமைப்பை மாற்றியதால்தான் சோனியா காந்தியால் சர்ச்சை ஏற்படுத்தப்படுகிறது.
நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வாய்ப்பு வந்தபோது, பிரதமர் நிவாரண நிதியின் ஆடிட்டர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். 2017-2018-ம் நிதியாண்டின் இறுதியில் மோடி அரசு அதனைச் செய்தது. பிரதமர் நிவாரண நிதியின் ஆடிட்டராக நிறுவனம் இருந்து வருகிறது. அந்த நிறுவனம் தற்போது பி.எம் கேரையும் சிறப்பான முறையில் ஆடிட் செய்யும்.
சோனியா காந்தியின் ஆதரவாளர்கள் சார்க் நிறுவனத்தின் சுனில் குப்தாவுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிவருகின்றனர். ஆனால், அவர் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தவர்.
பிரதமர் நிவாரண நிதி கொரோனா போன்ற அசாதாரண சூழலுக்கானது அல்ல. அந்த இடைவெளியை பி.எம்.கேர் நிரப்பும்.பிரதமர் நிவாரண நிதி வாரியத்தில் சோனியா காந்தியும் உள்ளார். பி.எம்.கேரில் எந்த கட்சி சார்ந்தவரும் கிடையாது. பிரதமர் நிவாரண நிதி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரால் ஆடிட் செய்யப்பட்டது. அந்த ஊழல் தற்போது நிறுத்தப்பட்டது. பி.எம்.கேரின் ஆடிட்டர் ஒரு வல்லுநர்.
பி.எம்.கேரின் மூலம் திரட்டப்பட்ட பணத்தில் 2,000 கோடி ரூபாய்க்கு இந்தியாவில் உருவாக்கப்பட்ட 50,000 வெண்டிலேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளது. 1,000 கோடி ரூபாய் புலம்பெயர் தொழிலாளர்களின் நலத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.