மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தோற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றார்கள் இதனை தொடர்ந்து “இது சிவசேனா ஆட்சி, காங்கிரஸ் ஆட்சியல்ல” என்று காங்கிரஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு சிவசேனாவை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக சிவசேனா தனது கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் இந்த மாநிலத்தில் நன்றாகத்தான் விளங்குகிறது, ஆனால் பழைய கட்டில் சப்தம் எழுப்புவதுபோல் அவ்வப்போது தன் இருப்பைக் காட்ட பழைய கட்டிலான காங்கிரஸ் கட்சி சப்தம் எழுப்பி வருகிறது. இந்நிலையில் இரண்டு அமைச்சர்களும் முதல்வரைச் சந்திக்கவுள்ளனர். ஆனால் காங்கிரஸ் என்ன சொல்ல விரும்புகிறது? ஏன் இந்தப் பழையக் கட்டில் சப்தமெழுப்பி வருகிறது.
இந்தக் கூட்டணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும்தான் உள்ளது, அவர்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லையே. இருப்பினும் அரசின் மூன்றாம் கால் காங்கிரஸ் கட்சியாக இருப்பதால் நிச்சயம் அதன் கவலைகளை முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டறிவார்.
12 எம்.எல்.சி. சீட்டுகள் சமமாக பகிரப்பட்டுள்ளது. எனவே இதுபிரச்சினையல்ல. சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 44 உறுப்பினர்கள் உள்ளனர். சிவசேனாவுக்கு 56, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 54 இடங்கள் உள்ளன. எனவே இதே விகிதத்தில் இடங்களை ஒதுக்குவதும் பிரச்சினையில்லை. அதிகாரப் பரவலாக்கத்தில் சிவசேனா நிறைய தியாகம் செய்துள்ளது.
காங்கிரஸ், என்சிபி சபாநாயகர் பதவிக்கு சண்டையிட்டனர். சரத் பவார் இதில் கடும் ஏமாற்றமடைந்தாலும் சபாநாயகர் பதவியை காங்கிரஸ் கட்சி ஏற்கட்டும் என்று விட்டுக்கொடுத்தார். ஆனால் இதற்குப் பதிலாக ஒரு அமைச்சரவை இடம் வேண்டும் என்றார். இது பிரச்சினையைத் தீர்த்தது.
முதல்வர் உத்தவ் தாக்கரே எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றினார். அதன் பிறகு 6 மாதங்களுக்கு எந்த கூச்சலும் இல்லை.
உத்தவ் தாக்கரேவுக்கு பதவி ஆசை கிடையாது. கடைசியில் அரசியல் என்பது அதிகாரத்துக்கானதுதான், அதிகாரம் வேண்டாம் என்று யாரும் கூறுவதில்லை. ஆனால் பதவிக்காக எதையும் செய்பவர் அல்ல உத்தவ் தாக்கரே. ஒவ்வொருவருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது, சிவசேனா இதில் பல தியாகங்களைச் செய்துள்ளது. பழைய கட்டில் என்ன சப்தம் வேண்டுமானாலும் போடட்டும், யாரும் கவலைப்பட போவதில்லை. இதுதான் இன்று கூறப்பட வேண்டியது.
இவ்வாறு சாம்னாவில் கூறப்பட்டுள்ளது .நிலைமை இப்படி இருக்க இதுவரை 40க்கும் மேற்பட்ட – காங்கிரஸ் , தேசியவாதகாங்கிரஸ் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க வை அணுகி ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என மராட்டிய ஊடகங்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.