அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் ஆகியோர்கள் தங்களின் கருப்பு பணத்தை பல நாடுகளில் பதுக்கி வைப்பார்கள் அதில் முக்கியமான நாடு தான் சுவிட்சர்லாந்து அங்கு வங்கிக் கணக்கு வைத்திருப்ப்வர்கள் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் என்பதால், அனைவரும் சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வந்தனர். அங்கு சேமித்து வைக்கும் கருப்பு பணமானது பயங்கரவாதம், போதை பொருள் கடத்தல் போன்ற தவறான நடவடிக்கைகளுக்கு செலவு செய்யப்படுகிறது.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் போடுவார்கள் 80%பேர் வரி ஏய்ப்பு செய்தவர்கள் தான் அதிகம். மேலேயும் இந்தியாவில் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சுவிட்சர்லாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார் இதனை கருத்தில் கொண்டு சுவிட்சர்லாந்து தனது விதிமுறைகளில் சற்றே மாற்றங்கள் கொண்டு வரத் தொடங்கியுள்ளது.
சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இந்தியா உள்ளிட்ட 75 நாடுகளுடன் 31,00,000 வங்கி கணக்குகள் குறித்த விபரங்களை பகிர்ந்துக் கொள்வதாக சுவிட்சர்லாந்து வரி நிர்வாகத்துறை தெரிவித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதன்முறையாக சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை சுவிட்சர்லாந்து நாட்டு அரசு, இந்திய அரசிடம் வழங்கியது. அடுத்த பட்டியல் இந்த ஆண்டு வழங்கப்படும் என்றும் சுவிட்சர்லாந்து தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சுவிஸ் நாட்டு வங்கிகளில் பணம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 77வது இடத்திற்கு வந்துவிட்டது.
முதல் பட்டியல் வெளியான பிறகு, இந்தியர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து பெருமளவில் பணத்தை எடுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.