சர்வதேச அளவில் விரிந்து கிளை பரப்பி உள்ளது மெட்ரிக் பள்ளிகளின் லாபி. இதன் சக்தி
சாதாரணமல்ல.
புதிய கல்விக் கொள்கையில் 1 முதல் 5 வகுப்பு வரை தமிழ் மீடியம் (தாய்மொழிவழிக் கல்வி) என்பதை
மெட்ரிக் பள்ளி அதிபர்கள் வரவேற்கவில்லை.
Play school, LKG, UKG என்று சிசுக்களிடம் காசு பிடுங்கி ருசி கண்ட கும்பல் சும்மா இருக்குமா?
அது வெறி கொண்டு பாய்கிறது.
படிப்பு என்று சொன்னாலே அது இங்கிலீஷ் மீடியத்தில்தான் என்பதே தனியார் மெட்ரிக் பள்ளி
அதிபர்களின் தாரக மந்திரம்.
அவர்கள் ஒருபோதும்
தமிழ் மீடியத்தை அதாவது தாய்மொழியில் கல்வியை
(mother toungue/regional language as medium of instruction)
ஏற்க மாட்டார்கள்.
மலம் கழிப்பது முதல்
மண்டையைப் போடுவது வரை
எல்லாமே இங்கிலீஷ் மீடியத்தில் தான் செய்ய வேண்டும் அவர்களுக்கு.
அடுத்த கல்வியாண்டு முதல் 1 முதல் 5 வகுப்பு வரை தமிழ் மீடியம் என்ற உத்தரவை மோடி அரசால் நிறைவேற்ற முடியுமா என்று காய்தல் வத்தல் அகற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
மத்தியக் கல்வி அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர்,
பிரதமர், ஜனாதிபதி என்று இந்திய அரசின் அதிகாரம் மிக்க இடங்களில் எல்லாம் மெட்ரிக் லாபி
சர்வ சாதாரணமாக நுழையும்.
அவர்கள் ஒருபோதும் தமிழ் மீடியம், தெலுங்கு மீடியம், தாயமொழிக் கல்வி என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அமைச்சர்களுக்கும்
அதிகாரிகளுக்கும் கடும் நெருக்கடி கொடுப்பார்கள்.
சாம பேத தான தண்டம் என்னும் நான்கு வழிகளையும் கையாள்வார்கள். மெட்ரிக் லாபி
என்பது கயமைத்தனமான ஒரு லாபி. அவர்களிடம் காசும் பணமும் எக்கச் சக்கமாகப் புழங்கும். அவர்கள் கொலையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.
அவர்களுக்கு அந்நிய நாடுகளில் இருந்து தேவையான
எல்லா உதவியும் கிடைக்கும். தேவைப்பட்டால் அமெரிக்க CIA இதில் தலையிடும். கிறிஸ்துவ
மெஷினரிகள் தமிழ் மீடியம் என்பதை ஒருபோதும்
ஏற்க மாட்டார்கள். இதற்கு ஆயிரம் உதாரணம் உள்ளது.
அது போக, அந்நிய நாடுகளிடம் இருந்து நிதி பெறுகின்ற
என்ஜிஓ அமைப்புகளும் வரிந்து கட்டிக் கொண்டு தாய்மொழிவழிக் கல்விக்கு எதிராகப் போர்
தொடுப்பார்கள்.
இந்தக் கயவர்கள் யாரும் தாய்மொழி வழிக் கல்விகூடாது என்ற தங்களின் நிலைபாட்டை வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். ஆனால்
மோசடியாக வேறு வேறு காரணங்களைச் சொல்லி
எதிர்ப்பார்கள்.
உதாரணமாக, சமஸ்கிருதத் திணிப்பை எதிர்க்கிறோம் என்பார்கள்.
மெட்ரிக் தரப்பில் இருந்து தமிழகத்தின் முக்கிய ஊடக
ஆசாமிகளுக்கு பணம் பட்டுவாடா ஆகிவிட்டது.
இனி அவர்கள் புதிய கல்விக் கொள்கையை வரிந்து
கட்டிக் கொண்டு எதிர்ப்பார்கள்.
போலியான தமிழ் தேசிய இயக்கம் நடத்தும் லெட்டர் பேடு அமைப்புகள், தனிநபர்களை மெட்ரிக் லாபி கரன்சி நோட்டால் அடித்து வருகிறது. இனி அவர்களும் தங்களின் வெறித்தனமான எதிர்ப்பை வெளிக்காட்டத் தொடங்குவார்கள்.
இந்தச் சூழ்நிலையில், அகில இந்திய அளவில் கொழுந்து விட்டு எரியும் தாய்மொழி வழிக்
கல்விக்கான எதிர்ப்பை மோடி அரசால் சமாளிக்க
முடியுமா?
நமக்கேன் வம்பு என்று மோடி அரசு ஒதுங்கவே வாய்ப்பு அதிகம். எனவே ஒருபோதும் தமிழ்நாட்டில்
1 முதல் 5 வகுப்பு வரை தமிழ் மீடியம் வராது.
வேளச்சேரியில் சன்ஷைன் மெட்ரிக் பள்ளியையே
நடத்தி வருகிறார் மு க ஸ்டாலினின் மகள் செந்தாமரை. எல்கேஜி அட்மிஷனுக்கே ஒரு லட்சம்! எல்லாம் இங்கிலீஷ் மீடியம்தான். தமிழில் பேசினால்
ரூ 200 அபராதமும் அங்கு உண்டு.
2021ல் இருந்து சன்ஷைன் பள்ளியில் இங்கிலீஷ் மீடியம்
கிடையாது என்று மோடியால் தடை போட முடியுமா? ஒரு மயிரும் முடியாது! தடை போட விடுவாரா
மு க ஸ்டாலின்?
தனியார் மெட்ரிக் பள்ளி லாபியை முறியடிக்காமல், தமிழ் மீடியம் என்பது சாத்தியப் படாது!
கட்டுரை :- நியூட்டன் அறிவியல் மன்றம்.