தமிழகமெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வரும் நிலையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. ஒருபக்கம் ஆன்மிகம் குறித்த சர்ச்சைகள், ,தமிழகத்தை உலுக்கிய கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகள் பாலியல் வழக்கு, கல்லூரியில் போதை பொருட்கள் கைப்பற்றிய விவகாரம் என மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குவிந்து கிடக்கும் நிலையில் இதையெல்லாம் மறக்கடிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சமூகவலைத்தளம் முதல் எந்த செய்தி சேனல்களை வரை மகா விஷ்ணு பெயரை ஒலித்து கொண்டிருக்கிறது. ஒலிக்கும் பெயராக உள்ளது…. யார் இந்த மகா விஷ்ணு பள்ளி கல்வித்துறை அமைச்சர் முதல், அமெரிக்காவில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வீடியோ வெளியீட்டு வரும் முதல்வர் வரை கண்டனம் தெரிவிப்பது எதற்காக.. காவல்துறை படைகள் சூழ துணை டிஜிபியே நேரில் சென்று விசாரணை நடத்தும் அளவிற்கு என்ன செய்தார் இந்த மகாவிஷ்ணு.. விமனநிலையத்தில் காத்திருந்து கைது செய்யும் அளவிற்கு என்ன தவறு செய்தார்,
ஒரு வேலை ஒரு வருடத்திற்கும் மேலாக தேடப்பட்டு வந்த வேங்கைவயல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவரா.. இல்லை முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தனசிங் கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவரா, போதை பொருள்கடத்தல் தொடர்பாக முக்கிய குற்றவாளியா.. கிருஷ்ணகிரியில் 50 பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த அயோக்கியனா, அதுவும் இல்லை என்றால் யார் இந்த மாகாவிஷ்ணு என்ற கேள்விதான் தற்போது தமிழகம் முழுவதும் ஒலித்து கொண்டிருக்கிறது
சென்னையில் ஓர் அரசு பள்ளியில் தன்னம்பிக்கை குறித்து உரையாற்றினார் மகா விஷ்ணு என்ற நபர். திருக்குறளை மேற்கோள் காட்டி பாவம், புண்ணியம், கர்மா, ஆன்மிகம் குறித்து மாணவ மாண்வர்களிடையே உரையாடியுள்ளார். இதற்கு தான் முதலமைச்சர், அமைச்சர் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு உருவாகி உள்ளது.இந்த நிலையில் மதுரையில் மாபெரும் சம்பவத்தை அரேங்கேற்றியுள்ளார்கள் மதுரை பள்ளி மாணவிகள். இது மகா விஷ்ணுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பெரும் இடியை இறக்கியுள்ளது.
மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு புத்தக கண்காட்சியானது நேற்று தொடங்கியது. மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு மையத்தில் நேற்று அமைச்சர் மூர்த்தி இந்த புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்தார்.அமைச்சர் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து சென்ற பிறகு, கிராமப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதுரை அரசு இசைக்கல்லூரி சார்பில் கிராமப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் மதுரைக்கே உரித்தான “அங்கே இடி முழங்குது” என்ற கருப்பசாமி பாடல் பாடப்பட்டது.
அந்த பாடலை இசைக்கலைஞர் பாடியவுடன் அங்கிருந்த பள்ளி மாணவிகள் க்தி மிகுதியில் சாமியாடினர். மாணவிகள் சாமியாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும்,புத்தக கண்காட்சியில் எதற்காக சாமி பாடல் ஒலிபரப்பட்டது என்ற கேள்விகளும் எழுந்தது. அப்போது மதுரை என்றாலே மீனாட்சி அம்மன், அழகர் கருப்பசாமி தான் வேற எந்த பாடலை ஒளிபரப்புவார்கள் என எதிர்தரப்பில் பதில் கூற ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த நிகழ்வு குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த இசை நிகழ்ச்சி மதுரை அரசு இசை கல்லூரி குழுவினரால் நடத்தப்பட்டது. பாடல்கள் கேசட்டில் ஒலிபரப்படவில்லை. இசைக்கலைஞர்கள் அதனை பாடியுள்ளனர். மாணவிகள் உணர்ச்சிவசப்பட்டு சாமியாடியுள்ளனர். அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து சென்ற பிறகு தான் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இசை நிகழ்ச்சியில் “அங்கே இடி முழங்குது” என்ற பாடலை கேட்ட பிறகு மாணவிகள் பக்தியில் சாமியாடிவிட்டனர். இதில் எந்த சர்ச்சையும் இல்லை. முழுக்க முழுக்க வேண்டுமென்றே இந்த பாடல் ஒலிபரப்பப்படவில்லை. கிராமப்புற இசை நிகழ்ச்சியில் இந்த பாடல் இடம்பெற்றுவிட்டது என்று மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, சென்னையில் ஓர் அரசு பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவில் மகா விஷ்ணு என்ற நபர் பாவம் புண்ணியம் கர்மா குறித்து பேசியதற்கு . இதற்கு முதலமைச்சர், அமைச்சர் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு உருவாகி உள்ள இந்த சமயம், புத்தக கண்காட்சியில் மாணவிகள் சாமியாடிய வீடியோ பேசுபொருளாக மாறியுள்ளது.