சில நாட்களுக்கு முன்னர் புதிய கல்விக் கொள்கை(NEP) 2020ஐ அமல்படுத்தபட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தது.
இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் அமைந்துள்ளது. அனைவரும் வரவேற்கத்தக்காக அமைத்துள்ளது இந்த புதிய கல்வி கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வியை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்விக் கொள்கை. பள்ளிக்குச் செல்லாத 2 கோடி குழந்தைகளுக்கு கல்வியை வழங்கவும் புதிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது.அடிப்படை எழுத்தறிவு மற்றும் கணிதப் பாடத்துடன், 6-ம் வகுப்பிலிருந்தே தொழிற்கல்வி வழங்கவும், பணியாற்றுவதற்கான செயல்முறை பயிற்சியை வழங்கவும் புதிய கல்விக் கொள்கை வகைசெய்கிறது.
இந்த கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த அம்சத்தினை தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் தேசிய அளவில் பல கல்வியாளர்களும்ஆதரிக்க தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே தமிழகத்தில் ஆங்கிலம் தமிழ் என இரு மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கக்கூடிய நிலையில் மும்மொழிக் கொள்கை அவசியம் எனவும் அரசியல் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மும்மொழி திட்டம் குறித்து முக்கிய செய்தியை தெரிவித்துள்ளார் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், “மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது.” என தமிழில் டிவிட் செய்துள்ளார்.