உதயநிதி அரசியலுக்காக என்னவெல்லாம் பேசலாம் என நினைத்து விட்டு பேசுகிறார் மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமாரை பார்த்து உதயநிதி பிளேபாய் என்று சொல்லியுள்ளார் இதற்கு பதிலுக்கு அவர் இவரை சாக்லட் பாய் என ஒரு நல்லவிதமாகவே சொல்லியுள்ளார் ஆனால் சண்டை வேறுவிதமாக மாற திமுக குடும்பமே பிளேபாய் குடும்பம் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லும் அளவுக்கு வந்துள்ளது.
அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது உதயநிதி பற்றி அமைச்சர் ஜெயகுமாரிடம் உதயநிதி ஸ்டாலினை ‘சாக்லேட் பாய்’ என்று கிண்டலாக சொன்னார் இதுகுறித்து உதயநிதியிடம் கேள்வி எழுப்பிய போது, “சாக்லேட் பாய் என்பது கெட்ட வார்த்தை அல்ல, அது ஒரு காம்ப்ளிமென்ட் தான். ஆனால் என்னை சாக்லேட் பாய் என்று கூறிய அமைச்சர் ஒரு பிளே பாய் (Play Boy)” என்று அமைச்சர் ஜெயக்குமாரை கிண்டலடித்தார் உதயநிதி.

இந்த கிண்டல் விவகாரம் அமைச்சர் ஜெயக்குமாரை சற்று கோபத்தில் ஆழ்த்தியது போல மீண்டும் உதயநிதி உங்களை ஒரு பிளே பாய் என கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் சீண்ட உதயநிதியன் பரம்பரையே ஒரு பிளே பாய் பரம்பரை என கருணாநிதியின் பரம்பரையை நடு தெருவில் விட்டுவிட்டார் அமைச்சர் ஜெயக்குமார்.
இதற்கு பெயர்தான் வாயை குடுத்து வம்பில் மாட்டுவது என சொல்வார்கள். உதய நிதி ஸ்டாலின் பேச்சிற்கு உட்கட்சியில் கண்டனம் எழுந்துள்ளது வயது வித்தியாசமில்லாமல், அரசியல் அனுபவத்துக்கும் முக்கியத்துவம் தராமல், பதவிக்கும் முக்கியத்துவம் தராமல், அமைச்சராக இருக்கும் ஒருவரை “ப்ளேபாய்” என்று உதயநிதி சொல்லி இருக்கக்கூடாது என கட்சியின் சீனியர்கள் உதயநிதி ஸ்டாலின் பேச்சிற்கு தங்களது கோபத்தை காட்டியுள்ளார்கள் .
மேலும் எதை பொது வெளியில் பேசவேண்டும் என்பதை உதயநிதி ஸ்டாலினுக்கு பாடம் எடுங்கள் என தலைமைக்கு அறிவுத்தியுள்ளார்கள்.தேவையில்லாமல் அமைச்சர் ஜெயக்குமாரை சீண்டி, அவர் இன்றைக்கு திமுக குடும்பத்தையே சொல்ல ஆரம்பித்துவிட்டார்.. இதற்கு உதயநிதி என்ன பதில் வைத்திருக்கிறார்? என தெரியவில்லை.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















