கன்னியாகுமரி மாவட்டம் எழுத்தறிவு மிகுந்தமாவட்டம். இங்கு தான் முதன்முதலில் இந்துமுன்னணி சார்பில் போட்டியிட்டு பத்மநாபபுரம் சட்ட மன்றதொகுதியில் இருந்து 1984ல் வை. பாலச்சந்தர் வெற்றி பெற்றார். பின்னர் பாஜக சார்பில் 1996 ல் வேலாயுதன் வெற்றி பெற்றார்.
மக்களவைக்கு 1999 ல் நாகர்கோயில் பாரளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 30–9–2000 முதல் 30–1–2003 வரை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்தார். தொடர்ந்து, 30–1–2003 முதல் 7–9–2003 வரை நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத் துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். பின்னர், 8–9–2003 முதல் 2004–ம் ஆண்டு மாதம் வரை தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராக இருந்தார்
பின்னர் 2014 மக்களவை தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோதி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. அதிலும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன் கனரக தொழில் மற்றும் பொதுத்துறை தொழிற்துறை இணை அமைச்சராக பணியாற்றினார், மத்திய நிதி மற்றும் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக பணியாற்றினார், இந்தகால கட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல நலத்திட்டங்களை குமரிமாவட்டதிற்க்கு கொண்டு வந்தார் பொன்னார். ஆனால் 2019 தேர்தலில் மத்தியில் பெரும்பான்மையுடன் பாரதியஜனதா ஆட்சி அமைத்தது.
கன்னியாகுமரியில் பாரதியஜனதா தோல்வியை தழுவியது. காங்கிரஸ் வெற்றி பெற்றது. குமரியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அப்படியே கிடப்பில் உள்ளது. சாலைபணிகள் நடைபெறவில்லை. ரயில்வே பணிகள் ஆமைவேகம். இந்த சூழலில் வசந்தகுமார் மறைவால் கன்னியாகுமரி பாராளுமன்றதொகுதி காலியாக அறிவிக்க பட்டது.
கன்னியாகுமரியில் மாற்றுகட்சியை சார்ந்த தொண்டர்கள் பாஜகவில் இனைந்து வருகிறார்கள்
நாகர்கோவிலை சார்ந்த திருமதி.பாரதி அவர்கள் தலைமையில் அகஸ்ட் 31ல் 500க்கு மேற்பட்ட பெண்கள் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர் இதில் பெரும்பன்மையோர் திமுகவினர். இதனால் கன்னியாகுமரி மாவட்ட திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது,
மேலும் காங்கிரஸ் கன்னியாகுமரிமாவட்ட பஞ்சாயத்து ராஜ் செயலாளர் நுள்ளிவிளையை சார்ந்த மகேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த 25 இளைஞர்கள் தங்களை பாஜகவில் இணைத்துகொண்டனர் இது கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினரிடையே பதட்டத்தை ஏறபடுத்தியுள்ளது.
மொத்தத்தில் கன்னியாகுமரி மாவட்ட அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.