தேசிய கல்விக் கொள்கை பற்றிய, மாநில ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார் அப்போது அவர் தெரிவித்ததாவது.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் பங்கு அதிகரிக்கும் போது தான், கல்வி கொள்கை முழுமையடையும். நாட்டின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மற்றும் கல்வித்துறையை சார்ந்தவர்களிடம் இருந்து கருத்துக்களை பெற்ற பின்புதான் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது. அனைத்து தரப்பினரும் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர்,
கல்வி முறையில் சீர்திருத்தத்தை மட்டும் ஏற்படுத்தாமல், 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படுகிறது
தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதுதான் இந்த கல்வி கொள்கையின் நோக்கம், வேகமாக மாறிக் கொண்டிருக்கம் சூழலில், இளைஞர்களை எதிர்காலத்துக்கு தயாரக்குவதுதான் இந்த கல்வி கொள்கையின் நோக்கம் .
படிப்பதை விட, கற்றலில் புதிய கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது மற்றும் பாடத்திட்டத்தை தாண்டி விவேகமாக சிந்திப்பதை புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. நடைமுறையை விட விருப்பம், செய்முறை மற்றும் செயல்பாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது,
கற்றலின் முடிவு, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஒவ்வொரு மாணவரையும் முன்னேற்றுதல் ஆகியவற்றில் புதிய கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது.
சர்வதேச பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் மையங்கள் அமைக்கவும் புதிய கல்வி கொள்கை அனுமதிக்கிறது இதன் மூலம் அறிவாளிகள் நாட்டை விட்டு வெளியேறும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
புதிய கல்விக் கொள்கையை நாட்டில் எப்படி அமல்படுத்துவது என்ற முயற்சி தற்போது நடப்பதாகவும், இதில் அனைத்து தரப்பினரின் ஆலோசனைகள் திறந்த மனதுடன் கேட்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அனைவரது சந்தேகங்களும் தீர்க்கப்படும் இந்த கல்வி கொள்கை, அரசின் கல்வி கொள்கை அல்ல, நாட்டின் கல்வி கொள்கை என பிரதமர் கூறினார்.
வேகமாக மாறிவரும் காலங்களுக்கு தேவையானதை தேசிய கல்வி கொள்கை வழங்குகிறது மண்டல மற்றும் சமூக சமநிலையற்ற தன்மையைப் போக்குவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றி வருவதாகவும், கல்வி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிற்கல்வியில் உள்ள குறைபாடுகளை நீக்கவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
தேசிய கல்வி கொள்கை-2020-ஐ முழுமையாக புரிந்து கொண்டு அமல்படுத்துவதற்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
கட்டுரை:- எழுத்தாளர் சுந்தர்.