உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆக்ராவில் கட்டுமானத்தில் உள்ள புதிய முகலாய அருங்காட்சியகத்திற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜின் பெயரிட ஒப்புதல் அளித்தார்.
உத்தரபிரதேசத்தில் நேற்று ஆக்ராவில் நடந்த கட்டுமான பணிகளை வீடியோ கான்பரன்சிங் மூலம்பார்வையிட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமூகவலைத்தளத்தில் பதிவு செய்திவில், “ஆக்ராவில் கட்டப்பட்டு வரும் இந்த முகலாய அருங்காட்சியகம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்ற பெயரில் அறியப்படும். உத்தரபிரதேசத்தில், ‘அடிமை மனநிலை’ மற்றும் அதன் அடையாளங்கள் செழிக்க இடமில்லை.நம் மாவீரர்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜ். ஜெய் ஹிந்த், ஜெய் பாரத். ” என்று தெரிவித்தார்.
இதற்கு சமூக ஊடக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
இது முகலாய மன்னர்களின் வரலாறு, கலாச்சாரம், ஆயுதங்கள் மற்றும் உடைகளைக் குறித்து அர்ப்பணிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது.
இருப்பினும், ஆதாரங்களை மேற்கோள் காட்டிய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், பெயர் மாற்றத்திற்குப் பிறகு இத்திட்டத்தின் தன்மை மாறும் என்று தெரிவித்துள்ளது. ஆக்ரா ஹெரிடேஜ் சென்டர், தாஜ் ஓரியண்டேஷன் சென்டர் போன்ற திட்டங்களுக்கும் அகிலேஷ் யாதவ் 2016 ல் ஒப்புதல் அளித்திருந்தார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீர் முடிவுகளுக்கு எந்த பதிலடியும் கொடுக்க முடியாமல் திகைத்து போகின்றனர் உத்தரப்பிரதேச எதிர்க்கட்சியினர்.