ஆங்கிலேயர்கள் அந்த கல்லூரி இந்த கல்லூரி கட்டி கொடுத்தான் என்ற கூப்பாடு இருக்கட்டும்200 வருடம் ஆட்சியில் இருந்துவிட்டு கல்வி கொடுத்துவிட்டு சென்றான் என்றால் எடுத்து புள்ளிவிவரம் பாருங்கள்.1947இந்தியா சுதந்திரம் வாங்கும் போது 12% தான் படித்தவர்கள் என்று கூறுவது கூட சரியான கணிப்பு அல்ல, உண்மையில் அது 7%க்கும் கீழ்.
அதாவது 200 வருடம் இந்த பிரிட்டீஷ் ஆட்சியில் 7% படித்து முன்னேறி இருந்தோம்.1947க்கு பின் இந்தியர்கள் தங்களை தாங்களே ஆட்சி செய்த இந்த கடந்த 60வருடத்தில் ஏறக்குறைய 80% படித்தவர்கள் என்ற நிலையை எட்டிவிட்டோம். இந்த விஷயத்தில் யார் சிறந்தவர்கள்???? இந்த கல்வி முறையே அவன் கொடுத்த பிச்சை என்று பேசும் விஷ பாம்புகள் இந்த பாதரியார்களுக்கு நான் கூற விரும்புவதுகொஞ்சம் 12ம் நூற்றாண்டுவரை கொரியா, சீனா, இந்தோனேசியா என்று ஆசியா முழுவதும் சில ஐரோப்பிய தேச தலை சிறந்த வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் எங்கே படித்தவர்கள் என்று கொஞ்சம் விவரம் தேடி படிக்கவும்.
நாலாந்தா , விக்ரமசிலா , ஓடந்தபுரி, மகவிஹரா என்று நாம் தான் உலகம் முழுவதும் கல்விகளை சென்று சேர்த்தவர்கள்.12ஆம் நூற்றாண்டு வரை உலகமே கல்விக்கு இந்தியாவை தான் சிறந்த இடமாக கருதினர்.2,000ஆசிரியர்கள், 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்தது உலகத்தில் நம் நாலந்தா கல்வி கூடத்தில் தான்.அது ஏதோ இன்று நேற்று அல்ல – 1200 கிபி வரை நன்றாகவே இயங்கியது.
இது போல பல்கலைக்கழகம் சென்று கல்வி பயின்ற ஆசிரியர்கள் பின்னர் அங்கிருந்து பிரிந்து குருகுலம் நடத்தி கல்வியை கொடுப்பது இந்த இந்தியாவின் கலாச்சாரம். ராஜா ராம்மோகன் ராய் 19ஆம் நூற்றாண்டில் கிராமங்களில் பள்ளிகள் தொடங்கி கல்வி கற்பிக்கும் முறையை அறிமுகம் செய்ததாக நமக்கு வரலாறு இருக்கு.
இது போல பல மனிதர்கள் பல முயற்சிகள் கிராமங்களில் செய்தனர். அதாவது எல்லோரும் காசி , நாலந்தா என்று சென்று படித்துவிட்டு பின்னர் நாடு, ஊர் திரும்பி மக்களுக்கு கல்வி கொடுப்பது என்று சுமார் 2000 வருட பழைய குரு குல கல்விமுறை இந்த இந்தியாவில் இருந்தது.உலகம் முழுவது 12ஆம் வகுப்பு வரை படிப்பதற்கு காரணம் இந்தியாவில் குருகுல கல்வி 12ஆண்டுகள் சொல்லி கொடுத்த பாதிப்பு தான் ஒழிய வேறு இல்லை.
{ஜாதி கொண்டு கல்வி மறுக்கும் கீழ்தரமான புத்தி என்னவோ இந்தியார்களுக்கு 800 கிபிக்கு பின் தான் வந்திருக்க வேண்டும். ஏன் என்றால் அதுவரை அனைவருமே கல்வி கூடங்களுக்கு சென்று படித்த வரலாறு உண்டு.குலம் என்பது பிறப்பால் அல்ல என்ற விஷயம் மறந்து- பிறப்பால் ஜாதியஅடையாளம் என்ற கட்டமைப்பு என்று உருவானதோ அன்று நாசமாக தொடங்கியது இந்த மண். அதற்காக பிரிட்டீஷ் ரொம்ப நல்லவன் கிடையாது. அங்கேயும் அடிமைகள் காலச்சாரம் இருந்து வந்தது.}
சரி எதனால் கல்விமுறை இங்கே பிரிட்டீஷ் கொண்டுவந்தது? 1820களில் மிக பெரிய அளவில் பிரிட்டீஷார் ஆட்சியின் கீழ் உள்ள அனைத்து நாடுகளிலும் பலர் மதம் மாற்றும் வேலைக்கு அனுப்பபட்டார்கள்,
அவர்கள் Evangelist. இந்த Evangelist வேலை மதம் மாற்றுவது – பிரிவினைகளை உருவாக்கி அதன் மூலம் மதம் மாற்ற வேண்டும்.
இங்கே மட்டும் அல்ல அனைத்து காலணி நாடுகளிலும் இந்த கூட்டம் சென்று வேகமாக வேலை செய்தது.
எனவே ஆங்கிலம் கட்டாயம் ஆக்கபட்டது, அவர்கள் கூறும் வரலாறு தான் படிக்க வேண்டும் என்ற நிலை உருவானது.இன்று வரை வாஸ்கோடகாமா முதல் முதலில் இந்தியா வந்தார் என்று தான் படிக்கிறோம். என்ன செய்ய?அவர் வருவதற்கு முன்பே இந்தியர்களின் வர்த்தகம் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருந்தது என்பதற்கு மிக பல ஆதாரங்கள் உண்டு.
இன்னும் சொல்வதானால் வாஸ்கோடகாமா வரும் போது இங்கே இந்திய மன்னர்கள் அரபு வணிகர்கள், இந்தோனேசிய வணிகர்கள எல்லோரும் இருந்ததாக தானே கூறியுள்ளார். ஆனாலும் அவர் தான் முதலில் வந்தார்.யாருக்கு? பிரிட்டீஷ்காரர்களுக்கு ஒரு போர்ச்சுக்கல்காரர் வந்தது தான் முதல் வரலாறு.
ஆனாலும் நாங்கள் இந்த வரலாற்றை படித்து தொலைய வேண்டியதாக உள்ளது. அதுக்கு காரணம் நேரு.
இன்னொரு சுவாரசியமான விஷயம் :எகிப்து மன்னன் Ramesses II இறந்த பதபடுத்தபட்ட உடலில் இருந்து தற்போது கெய்ரோ மியுசிமில் உள்ளது.அந்த உடலில் x-ray examination செய்யபட்டபோது கிடைத்த தகவல்படி – அதில் பயன்படுத்த பட்டுள்ளது மிளகு.அதாவது கிரேக்கம், ரோமன் என்று எந்த பழைய நாகரீகமும் இந்திய நாகரிகத்துடன் வணிகம் செய்து வந்ததற்கு பல ஆதாரம் உண்டு – அது எவ்வளவு பழமையானது என்று இதை வைத்து தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த மிளகு வரலாறு கொஞ்சம் படிங்க நாம் யார் என்பது தெரியும்.வே நோக்கம் மதம் மாற்றவேண்டும், தங்கள் வரலாறு தான் உலக வரலாறாக படிக்கவேண்டும், தாங்கள் சொல்வது தான் இந்திய வரலாறு என்று இருக்க வேண்டும் என்ற கேடுகெட்ட புத்தி.நாம் இங்கிலீஷ் மேனின் காப்பி ஆகி போனோம்.
Imitative Englishmen என்பது தான் பெருமை என்று ஆகிபோக மதம் மாற்றுவது எளிதாகி போனது.
அதனால் நம்முடைய பாரம்பரிய கல்வி முறை அழிந்தது. இப்போ பலருக்கு வாஸ்கோட காமா தான் பெரிய ஆள். அவர் எதனால் வந்தார் வந்து என்ன அட்டுழியம் செய்தார் என்பதெல்லாம் பலருக்கு தெரியாது.
பிஜேபி சமிபத்தில் வரலாற்றை மாற்றி எழுதுவதாக கூப்பாடு போடும் வெளிநாட்டு ஊடகங்கள் ஏன் கதறவேண்டும்???? ஏன் என்றால் பிஜேபி உண்மையான வரலாற்றை மாற்றி எழுத விரும்புகிறார்கள்.
சும்மா ரயில், மருத்துவம், கல்வி என்று பிரிட்டீஷ் ஒரு முகத்தை மட்டும் நடத்துவது தான் இங்கே இருக்கும் பெரிய தவறு என்று மாற்றி உண்மையை எழுத கூச்சல் போடுகிறார்கள்.