உ.பி, ஒடிஷா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் அரிசி(நெல் அல்ல) விலை கிலோ 20-30 கிலோவிற்கு கிடைக்கிறது. அதுவே தமிழகத்தில் 50 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது நடைமுறை விலை நிலவரம்.வேளாண் சட்ட மசோதாவிற்கு பிறகு உ.பி அரிசி தமிழகத்திற்கு வந்தால் இங்கே அதிகபட்சமாக 40 ரூபாய் ஒரு கிலோ என்று கிடைக்கும். இது மக்களுக்கு நல்லதா இல்லையா? சரி அப்ப தமிழக விவசாயிகள் பாதிக்கப் படுவார்களே என்று ஆதங்கப்படுபவர்கள், பக்கத்தில் இருக்கும் ஒரு விவசாயிடம் போய் கேட்டுப் பாருங்கள் அவர்களின் நெல்லிற்கு என்ன விலை கிடைக்கிறது என்று. ஒரு கிலோ நெல்லிற்கு 19.05 ரூபாய் தான் கிடைக்கிறது.
உ.பி அரிசிக்குப் போட்டியாக உள்ளூர் வியாபாரிகள் விலையைக் குறைக்கும் அதே நேரத்தில், பிற மாநிலத்திலிருந்து அரிசியை இறக்குமதி செய்பவர்கள் நம் ஊரிலேயே அரிசியை கூடுதல் விலை கொடுத்தாவது வாங்கி ட்ரான்ஸ்போர்ட் செலவினை தங்கள் லாபமாக வைத்துக் கொண்டு வியாபாரம்செய்ய முயல்வார்கள்.எனில், தேசமுழுவதும் ஒரு விலைச் சமநிலை ஏற்பட வாய்ப்பு பெருகுகிறது.
அதே நேரத்தில் விவசாயிகளிடம் அடி மாட்டு விலைக்கு வாங்கும் இடைத்தரகர்கள் காலப் போக்கில் காணாமல் போவார்கள். இது மிக அடிமட்டத்தில் நடக்கப் போகும் நிகழ்வு. இனி சிறு/குறு விவசாயிகள் ஏதோவொரு ஏஜெண்ட்டிடம் விளை பொருட்களைக் கொடுத்து ஏமாந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.இரண்டாம் கட்டமாக, விளை பொருட்கள் எல்லாம் விளைநிலங்களுக்குப் பக்கத்திலேயே பண்படுத்தப்பட்டு, நுகர் பொருட்களாக சந்தைக்குக் கொண்டு செல்லப்படும்.
இதன் மூலம், விவசாயிகளிடம் விளை பொருட்களை வாங்க வியாபாரிகள் கடும் போட்டியிட்டு அதிக விலை கொடுப்பதுடன், விவசாய குடும்ப உறுப்பினர்களையும் தங்கள் நிறுவனங்களில் பங்காளிகளாகவும், வேலை செய்பவர்களாகவும் இணைத்துக் கொள்வதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் கூடுதல் வளம் பெறும்.இதுவெல்லாம் இடைத்தரகர்களின் வாயில் மண்ணள்ளிப் போடும் என்பதால், அவர்கள் பெருமளவில் பணம் கொடுத்து திராவிட போலி விவசயிகளை ஏவி போராட்டம் நடத்தச் செய்யப் போகிறார்கள். விவசாயிகளே கவனமுடன் இருங்கள். உங்களை வறுமையிலேயே வைத்திருக்க நினைக்கும் திராவிடக் கட்சிகளின் போராட்டங்களை எதிர்த்து உங்கள் குரல்களை உயர்த்துங்கள். நிச்சியம் வாழ்வில் உயர்வீர்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















