அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை ஒட்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் திருக்கோவிலூரில் ரத்ததான முகாம் நடைபெற்றது.இந்நிகழ்வு திருக்கோவிலூர் நகர செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலையில், திருக்கோவிலூர் நகர ஐடி பிரிவு செயலாளர் விக்னேஷ் அனைவரையும் வரவேற்றார்,
கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தொடங்கி வைத்தார்.உடன் கள்ளகுறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தல்குமார், கள்ளக்குறிச்சி அதிமுக ஐடி பிரிவு மாவட்ட செயலாளர் கிருபாகரன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் விநாயகமூர்த்தி,ஒன்றிய செயலாளர்கள் சேகர், சந்தோஷ், துரைராஜ்,தனபால்ராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்கியராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சீனிவாசன்.
மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சதீஷ் பாண்டியன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் பிரிவு செயலாளர் பாண்டியன், ஒன்றிய ஐடி பிரிவு செயலாளர்கள் மற்றும் ஒன்றிய பிற அணி நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட ,ஒன்றிய, கிளை,வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர் இருந்தனர். இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.