Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

75 ஆண்டுகளாக இலவச கல்வி மரத்தடியில் புகட்டி வரும் மனிதகடவுள்!!

Oredesam by Oredesam
September 29, 2020
in இந்தியா, செய்திகள்
0
75 ஆண்டுகளாக இலவச கல்வி மரத்தடியில் புகட்டி வரும் மனிதகடவுள்!!
FacebookTwitterWhatsappTelegram

நமக்குத் தேவை ஏற்படும்போது, சொந்தங்களும் நட்புமே தூர விலகும் இக்காலத்தில், தன் வாழ்வைப் பற்றியும் வருமானத்தைப் பற்றியும் துளியும் கவலைப் படாமல், ஒரு வருடம் அல்ல இரண்டு வருடங்கள் அல்ல 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் பிறரின் கல்விக் கண்களை திறந்து கொண்டிருக்கிறார்.

ஒடிசாவைச் சேர்ந்த ஒரு முதியவர் 75 வருடங்களுக்கும் மேலாக பணம் ஏதும் வாங்காமல், ஒரு மரத்தின் அடியில் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து வருகிறார். வயதான ஆசிரியரான நந்தா பிரஸ்டி சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, இரவில் வயதானவர்களுக்கும் கற்பிக்கிறார்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

Odisha: An aged man in Jajpur teaches children under a tree for free.

Bartanda sarpanch says, "He has been teaching from the last 75 yrs. Refuses any support from govt as it's his passion. But we've decided to build a facility where he can teach children in comfort." (26.09.20) pic.twitter.com/kSYOAkFvss

— ANI (@ANI) September 27, 2020

குழந்தைகள் கல்வியை மேலும் தொடர 4 ஆம் வகுப்பு முடித்த பின்னர், அவர்களை ஆரம்ப பள்ளிகளுக்கு அனுப்புமாறு அவர் அறிவுறுத்துகிறார். கற்பித்தல் மீதான அவரது ஆர்வம் அவரது தொழில்முறை வாழ்வாதாரத்தை ஈட்டும் அவசியத்தையும் தோற்கடித்தது. 75 ஆண்டுகளாக அவர் தன் வருமானத்திற்காக வேறு எந்த வேலையையும் செய்யாமல், சேவை மனப்பான்மையின் உச்சக்கட்டமாக ஜஜ்பூர் மாவட்டத்தின் குழந்தைகளுக்கு கல்வி புகட்டி வருகிறார்.

அந்த முதியவர் பார்தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் வசதியாக கற்பிக்கும் விதத்தில் ஒரு நல்ல கட்டிடத்தை உருவாக்கிக் கொடுக்க அரசாங்க உதவியை நாடுமாறு கிராமத் தலைவர் பலமுறை அவரிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் ஒரு பழைய மரத்தின் கீழ் உட்கார்ந்து தனது வேலையைத் தொடரவே விரும்புகிறார்.

நான் விவசாய நிலங்களில் பணிபுரிந்தேன். எங்கள் கிராமத்தில் கல்வியறிவற்றவர்கள் பலர் இருப்பதைக் கண்டேன். அவர்களால் கையெழுத்திடக்கூட முடியவில்லை. கைநாட்டுதான் அவர்களால் முடிந்த விஷயமாக இருந்தது. கையெழுத்திடுவது எப்படி என்று அவர்களுக்குக் கற்பிப்பதற்காகவே நான் அவர்களை முதலில் அழைத்தேன். ஆனால் பலர் எழுதுவதிலும் படிப்பதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினர். பகவத் கீதையைப் படிக்கத் தொடங்கினர். எனது முதல் பேட்ச் மாணவர்களின் பேரக்குழந்தைகளுக்கு இப்போது நான் கற்பிக்கிறேன்” என்று பிரஸ்டி கூறினார்.

பார்தண்டா சர்பஞ்ச், “அவர் கடந்த 75 ஆண்டுகளாக கற்பித்து வருகிறார். கற்பித்தல் அவரது விருப்பம் என்பதால் அவர் அரசாங்கத்தின் எந்த ஆதரவையும் மறுக்கிறார். ஆனால் அவர் குழந்தைகளுக்கு வசதியாக கற்பிக்கக்கூடிய வகையில் ஒரு கட்டிடத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம்.” என்று கூறினார்.

தீவிர வானிலையோ, மழையோ, வெயிலோ, காற்றோ, குளிரோ, எதுவும் இந்த வயதான மனிதரின் ஆர்வத்தைத் துளி கூட குறைக்கவில்லை என கிராம சர்பஞ்ச் ANI இடம் கூறினார்.

அவரது முதுமையை மனதில் கொண்டு, கிராம பஞ்சாயத்து, அவர் கற்பிக்க ஒரு கட்டிடத்தை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளதுடன், வயதான அவரை தனது சேவையை அக்கடிடத்தில் இருந்து நிம்மதியாகத் தொடருமாறும் கோரியுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

நம் பிரதமரின் வேண்டுகோளை ஏற்போம் கொரோனாவை தடுப்போம்! கொரோனாவின் 3 வது கட்டத்தை கடப்போம்!

நம் பிரதமரின் வேண்டுகோளை ஏற்போம் கொரோனாவை தடுப்போம்! கொரோனாவின் 3 வது கட்டத்தை கடப்போம்!

March 21, 2020

கோயிலில் விளக்கேற்றுவதற்காகவே கஜினி நகரில் வசித்துவரும் ராஜாராம்.

October 1, 2020
இணையத்தை தெறிக்கவிடும்  #வரிகட்டுங்க_விஜய்! விஜயை வச்சு செய்த நெட்டிசன்கள்!

இணையத்தை தெறிக்கவிடும் #வரிகட்டுங்க_விஜய்! விஜயை வச்சு செய்த நெட்டிசன்கள்!

July 13, 2021
mamta

மம்தா பானர்ஜிக்கு கிடைத்த மரண அடி ! மேற்கு வங்கத்தில் ஆட்சியை தீர்மானிப்பது நீதிமன்றம் தான்!

August 19, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x