ராஜாராம் ஆப்கானிய ஹிந்து. இவருடைய முன்னோர்கள் காலந் தொட்டே ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி நகரில் வாழ்ந்து வருபவர்கள். 1980 கள் வரை ஆப்கானின் முக்கிய நகரங்கள் பலவற்றில் ஹிந்துக்கள், சீக்கியர்கள் வாழ்ந்து வந்தனர்.
1980குப் பிறகு நாட்டில் பயங்கரவா தம் தலையெடுக்கத் துவங்கியது. இன்று நாடே சீரழிந்து கிடக்கிறது. இஸ்லாமிய & தாலிபான் பயங்கர வாதிகள் சொல்வதுதான் சட்டம். இஸ்லாமியர் அல்லாதவர்கள் மீது தொடர் தாக்குதல்கள், ஆள்கடத்தல் கள், தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டதால் ஆப்கானில் வசித்து வந்த ஹிந்துக்கள் சீக்கியர்கள் பலர் அங்கிருந்து தப்பித்து மேற்குலக நாடுகள் பலவற்றில் குடியேறியுள்ள னர்.
அதிகமானோர் நமது நாட்டிற்கு வந்துள்ளனர். அம்மாதிரி வந்துள்ள வர்களுக்குத்தான் மோதி தலைமை யிலான அரசு குடியுரிமைவழங்கியது. கடந்த மாதம்கூட சில சீக்கியஹிந்துக் குடும்பங்களை அங்கிருந்து நமது நாட்டிற்கு அழைத்து வந்தது. அங்கு அவர்களால் பாதுகாப்பாக வாழ முடியாத நிலைமை நிலவுகிறது.
3 மாதத்திற்கு முன்பு குருத்வார ஒன் றின் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தியதில் 22சீக்கியர்கள் கொல்லப் பட்டனர். கஜனியில் வசித்து வரும் ராஜாராம் அவர்களும் தனது மனைவி மற்றும் தனது 3 குழந்தை களையும் பாரத திற்கு அனுப்பி வைத்துவிட்டு அவர் மட்டும் தனியொரு ஹிந்து கஜனி நகரிலேயே தங்கிவிட்டார்.
அதற்கு அவர் சொல்லும் காரணம் “நாங்கள் வழிபாடு செய்து வந்த கோயிலில் இறைவனுக்கு விளக்கேற்றுவதற் காகவே” இங்கு தங்கிவிட்டேன் என்று கூறுகிறார். தற்சமயம் கஜனி நகரில் வசித்து வருகிற ஒரேயொரு ஹிந்து இவர் மட்டுமே.
மீண்டும் ஒருநாள் நிச்சயமாக ஆப்கானில் அமைதி திரும்பும். அப்போது இங்கிருந்து வெளியேறிச் சென்றவர்கள் எல்லாம் மீண்டும் எங்கள் தாயகத்திற்குத் திரும்பி வருவார்கள் என்று நம்பிக் கையுடன் தான் வழிபட்ட இறைவனுக்கு விளக்கேற்றுவதற்காகவே தனது வாழ்வை அற்பணித்துள்ளார் ராஜாராம். அவருடைய பக்தியைப் பாராட்டுவோம்.
நாமும் நமது கோயில்களை நன்கு பராமரிப்போம்.
கட்டுரை :- எழுத்தாளர் சடகோப்பன் நாராயணன்.