கடந்த 28 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய கல்விக் கொள்கையினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் எப்போதும் போல் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் திராவிட அரசியல் கட்சியினர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கனிமொழி ஒரு ட்வீட் பதிவு செய்தார் அந்த பதிவில் எப்போதும் போல் அரசியல் தான் இந்தி எதிர்ப்பு தான் அவர் பதிந்த ட்வீட்
“இந்தியராக இருப்பதெனில் இந்தி பேசுவதற்கு சமம் என எப்போதிருந்து உணரப்படுகிறது?” என கேள்வியெழுப்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்தி திணிப்பு என்கிற ஹேஷ்டேகையும் பயன்படுத்தினார். அதற்கு ஸ்டாலின் ஆதரவு காங்கிரஸ் ஆதரவு என போட்டிபோட்டு கொண்டு கனிமொழி விவரத்தினை பேசினார்கள்.
அதாவது கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஐ.எஸ். எஃப் அதிகாரி கனிமொழியிடம் இந்தியில் ஏதோ கேட்டுள்ளார் எனவும் . அதற்கு கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுள்ளார்.
ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியர்தானே இந்தி தெரியாது என சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பியதாக பொய் குற்றச்சாட்டை முன்வைத்தார் கனிமொழி.பின் விசாரித்து பார்த்ததில் அப்படி சம்பவம் ஏதும் நடக்கவில்லை என சி.எஸ்.ஐ.எப் விளக்கமளித்தது.
மேலும் தமிழ்நாட்டில் இருந்து முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் ரயில் பயணிகளுக்கு இந்தியில் எஸ்.எம்.எஸ் அனுப்புவதாக கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கொதித்தெழுந்தார்கள் இந்த புகாருக்கு, தெற்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தி எஸ்.எம்.எஸ் விவகாரத்தில் ஐ.ஆர்.சி.டி.சி – யின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக M.P.க்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம், எல்லா பயணிகளுக்கும் இந்தியில் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளது.
சுய விவரம் என்ற தலைப்பில் விருப்ப மொழியை தேர்வு செய்யும் இடத்தில் பயணி ஒருவர், இந்தி மொழியை தேர்வு செய்திருந்தார் என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. இதுவே, கணினி உருவாக்கிய செய்தி இந்தியில் அனுப்பப்பட்டதற்கு காரணம் என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
எனவே, இ-டிக்கெட்டு களை முன்பதிவு செய்யும் பயணிகள் தங்கள் சுயவிவரத்தை ஐ.ஆர்.சி.டி.சி இணைய தளத்தில் பதிவு செய் யும் போது சரியான மொழி விருப்பத்தை தேர்வு செய்யு மாறு, தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்று பொய்யான செய்திகளை வெளியிட்டு அசிங்கப்பட்டு வருகிறார்கள் திமுகவினர் இதுபோல் பல நாடகங்களை நடத்தி வருகிறார்கள் திமுகவினர். தேர்தல் நேரத்தில் தமிழகத்தை அசாதாரண சூழல் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள் என குற்றசாட்டு எழுந்துள்ளது.